குஜராத் தொங்கு பாலம் விபத்து : 60 பேர் பலி... சரிசெய்து 4 நாள்களில் கொடூரம்..
Gujarat Morbi Bridge Collapsed : குஜராத் தொங்கு பாலம் விபத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்.
Gujarat Morbi Bridge Collapsed : குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 50 வருடங்களுக்கு மேல் பழைமையான தொங்கு பாலம், இன்று மாலை இடிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், பலரும் ஆற்றில் விழுந்து தத்தளித்து வருகின்றனர்.
சிலர் ஆற்றில் நீந்தி கரை திரும்ப முயற்சித்து வருகின்றனர். மேலும், இடிந்து ஆற்றில் விழுந்த பாலத்தின் முனையில், நின்றுகொண்டும் சிலர் உயிருக்கு போராடி வருகின்றனர். அதில், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளனர்.
இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 பேருக்கு மேல் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Seoul Halloween stampede: சமீபத்தில் உலகையே உலுக்கிய அசம்பாவிதங்கள்!
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து குஜராத் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா கூறுகையில்,"இந்த பாலம் கடந்த வாரம்தான் புனரமைக்கப்பட்டது. இது எங்களுக்கும் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை 60 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அரசு இந்த விபத்திற்கு பொறுப்பேற்கும்" என்றார்.
இந்த விபத்து உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழையும் அதேவேளையில், ஆற்றில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் எஞ்சியோர் விரைந்து பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மோர்பி தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். நான்கு நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த அக்டோபர் 26 அன்றுதான், குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டு புனரைமக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இறக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ