குஜராத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெற்றியை பாஜக பெற உள்ளது. 1995ஆம் ஆண்டு 149 தொகுதிகளை காங்கிரஸ் வென்றதே இப்போது அவரை குஜராத்தில் சாதனையாக உள்ள நிலையில், அதை பாஜக இந்த தேர்தலில் முறியடிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரப்படி (மதியம் 2 மணி நிலவரம்) பாஜக 65 இடங்களை வென்று, 93 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, 150 இடங்களுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து 7ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்க உள்ளது. 


சிபிஎம் சாதனையை நெருங்கும் பாஜக


மேலும், வரும் ஐந்தாண்டு காலத்தை வெற்றிகரமாக பாஜக, குஜராத்தில் ஆட்சிசெய்யும்பட்சத்தி, தொடர்ந்து அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி என்ற பெருமையை பாஜக பெறும். இன்றுவரை பாஜக, குஜராத்தில் 27 ஆண்டுகள், 8 மாதங்களாக தொடர்ந்து ஆட்சிசெய்கிறது. 


அடுத்த ஐந்து ஆண்டுகளில் 33ஆவது ஆண்டை உறுதிசெய்யும். முன்னதாக, மேற்கு வங்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 ஆண்டுகள் 10 மாத காலத்திற்கு (1977 - 2011) ஆட்சி செய்ததே சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க முடியவில்லை என்றாலும், அதன் அருகில் பாஜக சென்றுவிடும்.  


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தில் பாஜகவின் இந்த வெற்றி குறித்து தொடர் ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில், 'இலவசங்களை தருவதாக கூறியவர்களை மக்கள் ஒதுக்கியுள்ளார்கள்' என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | Gujarat Election Result: ட்விட்டரில் மீம்ஸ் திருவிழா, நெட்டிசன்களின் அரசியல் அலப்பறை!


'மோடியின் வளர்ச்சி மாடலுக்கு கிடைத்த வெற்றி'


"இலவசவத்தை வைத்து அரசியல் செய்பவர்களை நிராகரிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனைக் குறிக்கும் நரேந்திர மோடியின் பாஜகவுக்கு குஜராத் வரலாறு காணாத அதிகாரத்தை வழங்கியுள்ளது.


பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து பிரிவினரும் முழு மனதுடன் பாஜகவுடன் இருக்கிறார்கள் என்பதை இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், மோடியின் தலைமையில், குஜராத்தில் வளர்ச்சியின் அனைத்து சாதனைகளையும் பாஜக முறியடித்தது. இன்று குஜராத் மக்கள் பாஜகவை ஆசீர்வதித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளனர். இது நரேந்திர மோடியின் வளர்ச்சி மாடலில் பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாகும்" என்றார். 


இதில், ஆம் ஆத்மி கட்சியை அமித் ஷா தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதிய திட்டம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை தனது தேர்தல் அறிக்கையில் அறிவிருந்திருந்தது. 


பாஜகவின் இலவசங்கள்...


ஆனால், ஆம் ஆம்தியை போன்று பாஜகவும் சில இலவசங்களை அறிவிருந்திருந்தது. அதாவது, இலவச கல்வி, இலவச சுகாதாரம், ஆண்டிற்கு இரண்டு இலவச சிலிடண்டர்கள், மானிய விலையில் கடலை மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை பாஜக அறிவித்தது. குறிப்பாக, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டரும் இதில் அடக்கம். 


மேலும், இலவசங்களை எப்போதும் பாஜக அரசு சாடி வருவது வழக்கம். தமிழ்நாட்டை பொருத்தவரையில் திமுக, அதிமுக கட்சிகள் பல்வேறு இலவசத் திட்டங்களை சமுக நீதி திட்டம் என்ற நோக்கிலேயே வழங்கி வந்துள்ளதாக கூறப்படும். 


இலவசத்தை வழங்குவது அனைவரும் சமமான வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் எனவும் கூறப்படுகிறது. தற்போது, ஆட்சியில் உள்ள திமுக அரசு இதனை 'திராவிட மாடல்' என்ற பெயரில் அழைத்து வரும் நிலையில், அமித் ஷாவின் இந்த பேச்சு இலவசத்தை வழங்கும் கட்சிகளை ஒட்டுமொத்தமாக தாக்குவதாகவே அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Gujarat Election Results 2022 : தொடர் வெற்றி... மோடி தலைமையில் கொண்டாட்டம்... குஷியில் டெல்லி...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ