Winter Holiday Full Details: டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் உற்சாகமாக இருக்கும். வட மாநிலங்களில் கடும் குளிர்வாட்டி வருகிறது. பல மாநிலங்கள் குளிர்கால விடுமுறைக்கு தயாராகி வருகிறது. அந்த வரிசையில் இந்த முறை சத்தீஸ்கரில் உள்ள கல்வித்துறை பள்ளி குளிர்கால விடுமுறையை அறிவித்து மாணவ - மாணவிகளுக்கு நற்செய்தியை அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் 8 நாட்கள் விடுமுறை


குளிர்கால விடுமுறை என்பது டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை இருக்கும். இதில் ஞாயிறு காரணமாக மொத்தம் 8 நாட்கள் விடுமுறையை மாணவ - மாணவிகள் அனுபவிக்க முடியும்.


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்


குளிர் காலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குளிரில் இருந்து அவர்களை பாதுகாப்பது என்பது குளிர்கால விடுமுறையின் முக்கிய நோக்கமாகும். பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குளிரின் தாக்கத்திற்கு மத்தியில் அறிவிக்கப்பட்டது மிகவும் முக்கியமானது.


பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை லிஸ்ட்


டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை இருக்கும். மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு முன்னும் பின்னும் வருவதால், இந்த விடுமுறை 8 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உளதுஉள்ளது. ஏனென்றால் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், குளிர்கால விடுமுறை எப்பொழுது விடப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.


பள்ளி குழந்தைகள் நலனில் அக்கறை?


குளிர் காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஓய்வு கொடுத்து அவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டவே இந்த விடுமுறை அளிக்கப்பட்டு உ ள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.


வானிலை காரணமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு?


டிசம்பரில் குளிர் அதிகமாக இருப்பதால், உயரமான பகுதிகளில் பனிப்பொழிவும், சமவெளிப் பகுதிகளில் வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு குளிர்கால விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை எடுத்து உள்ளது. இந்த முடிவு மாணவர்களின் உடல்நிலையில் குளிரின் தாக்கத்தை குறைக்கும்.


பி.எட் மற்றும் டி.எட் கல்லூரி மாணவர்களுக்கும் நிவாரணம்


இம்முறை பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி பி.எட், டி.எட் கல்லூரி மாணவர்களும் குளிர்கால விடுமுறையின் பலனை பெறுவார்கள். நீண்ட நேர படிப்பு மற்றும் தேர்வுகளுக்குப் பிறகு அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிம்மதி பெற இந்த விடுமுறைகள் உதவும்.


1. குளிர்கால விடுமுறை எப்போது தொடங்கும்?
டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை.


2. B.Ed-D.Ed கல்லூரிகளிலும் குளிர்கால விடுமுறை பொருந்துமா?
ஆம், பி.எட் மற்றும் டி.எட் கல்லூரி மாணவர்களும் இந்த விடுமுறையின் பலனைப் பெறுவார்கள்.


3. 2024-25 கலாவி ஆண்ட்டில் எத்தனை விடுமுறைகள் விடப்பட்டு உள்ளது?
தசரா, தீபாவளி, குளிர்காலம் மற்றும் கோடை விடுமுறை என மொத்தம் 64 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.


மேலும் படிக்க - மாணவர்களுக்கு நல்ல செய்தி வருமா...? கல்வி உதவித்தொகை - ஸ்டாலின் சொன்ன முக்கிய பாயின்ட்!


மேலும் படிக்க - Pongal Gift 2025 | பொங்கல் மளிகை தொகுப்பு குறித்து கூட்டுறவுத் துறை முக்கிய உத்தரவு


மேலும் படிக்க - மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ