Rahul Gandhi: எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்... வெற்றி குஷியில் ராகுல் கூறியது என்ன?
Rahul Gandhi: கர்நாடகாவில் வெறுப்பின் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என அம்மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi On Karnataka Election Victory: மகத்தான வெற்றியுடன் தனது கட்சி அடுத்த ஆட்சியை அமைக்க உள்ள கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்."வெறுப்பின் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன," என்று டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் உற்சாகமாக காணப்பட்ட கட்சித் தொண்டர்களிடம் அவர் கூறினார்.
ஐந்து வாக்குறுதிகள்!
"கர்நாடக தேர்தலில் ஒரு பக்கம் கூட்டு முதலாளிகளின் பலம், மறுபுறம் ஏழைகளின் பலம். இதில் ஏழை, எளிய மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது தொடரும். ஏழைகளின் பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் போராடியது," என்று அவர் மேலும் கூறினார், கட்சி தனது அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அளித்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.
120+ தொகுதிகள்
ஏறக்குறைய 140 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், அதன் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்த 120 இடங்களைத் தாண்டிவிடும் என்று தெரிகிறது. 244 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலை வகித்துவரும் நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார்.
மேலும் படிக்க | கர்நாடகாவை ‘கை’ப்பற்றும் காங்கிரஸ்... வெற்றி பெற உதவிய உத்திகள் இவை தான்!
zeenews.india.com/tamil/india/karnataka-election-result-2023-issues-that-helped-congress-to-attain-majority-444138
'கை'க்கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை
ராகுதி காந்தி மேற்கொண்ட தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது கர்நாடக மாநிலத்தில் 22 நாட்கள் முகாமிட்டிருந்தார். இதுதான் வெற்றிக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று என காங்கிரஸ் தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்த யாத்திரை கடந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கர்நாடகாவில் நுழைந்து சாமராஜநகர், மைசூரு, மாண்டியா, தும்கூர், சித்ரதுர்கா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் நடந்தது. சுமார் 22 நாட்களில் 500 கி.மீ., தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
இதுதான் மக்கள் எதிர்பார்த்தது
"இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த சஞ்சீவினி. இது அமைப்பை உற்சாகப்படுத்தியது மற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே ஆழமான ஒற்றுமை உணர்வைத் தூண்டியது" என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசியிருந்தார். பாரத் ஜோடோ யாத்திரை இந்திய அரசியலில் ஒரு குறிப்பிடத்தகுந்த அத்தியாயத்தை தொடங்கியது. இதுதான் இந்திய மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது" என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறினார்.
ராகுல் தான் பிரதமர்...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை என விவரித்த சித்தராமையா, "இந்தத் தேர்தல் முடிவு மக்களவைத் தேர்தலுக்கு ஒரு படிக்கட்டு. பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்பதைக் காண்பேன் என்று நம்புகிறேன். ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவார் என நம்புகிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ