கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக முடக்கிவைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து சேவையினை வெள்ளியன்று ஹரியானா மாநிலம் மீண்டும் துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக வெள்ளிக்கிழமை மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கிய பின்னர் மாநிலத்திற்குள் பொது போக்குவரத்தை திரும்ப கொண்டுவந்த முதல் மாநிலமாக ஹரியானா பெயர் பெற்றுள்ளது.


இதுகுறித்து ஹரியானா காவல்துறை ஆணையர் மனோஜ் யாதவ் தெரிவிக்கையில்., "நாங்கள் நிறைய பேரை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம். எனினும், எங்கள் மக்கள் பலர் பல்வேறு மாவட்டங்களில் பயணிக்க வழி இல்லாமல் சிக்கித் தவிப்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்போதுதான் நாங்கள் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளைத் தொடங்க முடிவு செய்தோம்" என்று தெரிவித்துள்ளார்.


மாவட்டங்களுக்கிடையிலான பேருந்துகள் அதன் இலக்கில் மட்டுமே நிறுத்தப்படும், இடையில் நிறுத்தப்படாது. மேலும் டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தகவல்கள்படி கடந்த ஒரு வாரத்தில், ஒரு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு மாநிலம் திரும்பியனுப்பியுள்ளது.


ஆரம்பத்தில், ஹரியானா அரசு பஸ் சேவைகளை மீண்டும் தொடங்க 29 வழிகளை நியமித்திருந்தது. ஆனால் முன்பதிவு இல்லாததால் ஒன்பது வழித்தடங்கள் நிறுத்தப்பட்டன. முதல் நாள், எட்டு டிப்போக்களில் இருந்து பேருந்துகள் 196 பயணிகளுடன் பல வழித்தடங்களில் பயணத்தை மேற்கொண்டன. இதனால் ரூ.42,580 வருவாய் சாலை போக்குவரத்தில் மாநிலத்திற்கு கிடைத்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.