சண்டிகர்: தனியார் துறை வேலைகளில் மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான கட்டளை ஒன்றை கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு ஹரியானா அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. வரைவு கட்டளை அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் சபை முன் வைக்கப்படும். பாஜகவுடன் கூட்டணி பங்காளியான துஷ்யந்த் சௌதாலாவின் ஜன்னாயக் ஜனதா கட்சி, தேர்தல்களில், முக்கியமாக தனியார் துறை வேலைகளில், மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், உள்ளூர் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனையை முன்னுரிமையாக வைத்து, 'ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கன வேலைவாய்ப்பு மசோதா, 2020' மசோதாவை தயாரிக்கும் முன்மொழிவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் மாநிலத்தில் வேலைவாய்ப்பு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


'அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைவு மசோதாவின் கீழ், தனியாரால் நிர்வகிக்கப்படும் பல்வேறு நிறுவனங்கள், குழுக்கள், அறக்கட்டளைகள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் போன்றவற்றில் ரூ .50,000 க்கும் குறைவான சம்பளத்துடன் கூடிய வேலைகளில் 75 சதவீதம் வரை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.


கடந்த வருட தேர்தலின்பொழுது, ஹரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்படும் என கூட்டணி கட்சிகள் அறிவித்தன.  இதன்படி, ஹரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா அமைச்சரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை துஷ்யந்த் இன்று தாக்கல் செய்துள்ளார்.


 


READ | விரைவில் தனியார் ரயிலை ரயில் தடங்களில் காணலாம்: ரயில்வே துறையின் முக்கிய நடவடிக்கை


இதனை தொடர்ந்து இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. இது ஹரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறியுள்ளார்.


கூட்டத்திற்குப் பிறகு, சௌதாலா, "இன்று ஹரியானாவின் இளைஞர்களுக்கு ஒரு வரலாற்று நாள், ஏனெனில் இப்போது தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் ஹரியானாவின் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைகளை வழங்குவது கட்டாயமாக இருக்கும்" என்றார்.