ஹரியானா ஹிசார் பகுதியில் நடைபாதையில் தூக்கத்தில் ஐந்து பேர் வாகனம் விபத்தில் சிக்கி பரிதாப பலி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா மாநிலம் ஹிஸார் நகரில் உள்ள பாலத்தில் உள்ள நடைபாதையில் செவ்வாய்க்கிழமை இரவு (நேற்று) உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதையடுத்து, அந்த வாகனம் பாலத்தின் நடைபாதையில் படுத்திருந்த மக்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து ஏறியுள்ளது. 


இந்த சம்பவமானது சரியாக நள்ளிரவு சம்பவம் 2:00 மணியளவில் நடந்துள்ளது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த ஆரம்ப தகவல்களின்படி விபத்தில் உயிரிழந்தவர்கள் பீகாரில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் அடையாளம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்து குறித்த மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்....