சண்டிகர்: ஹரியானாவை சேர்ந்த பெண் காவலரை அவருடன் பணிபுரியும் தலைமை காவலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டிகரின் பவல் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலரை, அவரது தலைமை காவலர் தனது சகோதரன் உதவியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியாதாக, பாதிக்கப்பட்ட பெண் காவலர் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரி வாஷிம் அக்ரமிடம் புகார் அளித்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரவித்தக வாஷிம் அக்ரம்.. இச்சம்பவம் காவல்துறையின் உள் நிகழ்ந்தது என்று செய்தி ஊடகங்கள் தவறான செய்தி பரப்பி வருகின்றன என தெரிவித்துள்ளார்.


சம்பந்தப்பட்ட பெண் காவலருக்கும், குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் மின்ட்டு என்பவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு மஹேந்திரகார்க் பகுதியில் பணிபுரியும் போது அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து தங்களது நப்பினை வளர்த்து வந்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது புகார் அளித்துள்ள பெண் காவலர், தான் பாரிதாபாத் காவல் நிலையத்திற்கு மாற்றம் பெற்று வந்தததற்கு பின்னர் இந்த வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த்தாக அவர் புகார் அளித்துள்ளார். மேலும் இவர்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மின்ட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி தொடர்ந்து நொருக்கமாக இருக்க பெண் காவலரை பணித்துள்ளார் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து மேலும் விவரங்கள் அளித்த அக்ரம்.. இந்த புகாரில் சம்பந்தப்பட்டுள்ள பெண் காவலர் மற்றும் தலைமை காவலர் இருவரும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.