போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூரை சேர்ந்த ஹாசினி எனும் சிறுமியை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். 


பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். 


பின்னர் அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின் தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


போரூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தஷ்வந்துக்கு மரண தண்டனை அளித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிற்கு ஹாசினி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.