2 கட்சிகளுக்கு இடையில் விளையாட்டுப் பொருளாகிவிட்டேன்- மல்லையா
பல வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்தில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைதுசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் விஜய் மல்லையா, நேற்று லண்டனில் நடந்த பார்முலா-1 கார்ப் பந்தயத்தில் காணப்பட்டார்.
அப்போது பேசிய அவர்:-
தேர்தல் பிரசாரங்களில் என்னைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு மத்தியில், நான் விளையாட்டுப் பொருளாகிவிட்டேன் என்பது தெரிகிறது. சட்டம் அதன் கடமையைச் செய்யும். இங்கிலாந்துச் சட்டப்படி நான் பத்திரமாக உள்ளேன்' என்று கூறினார்.