உத்தரபிரதேசம் : ஆசிரியர்களை நம்பி குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர். ஆனால் அங்கு இருக்கும் சில கொடூரர்களோ அவர்களை சித்திரவதை செய்கின்றனர். குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது, கண் முன் தெரியாமல் அடித்து பலத்த காயத்தை ஏற்படுத்துவது போன்ற பல கொடூர செயல்களை செய்து விடுகின்றனர் . 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்திற்குள் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் குறும்பு செய்த காரணத்திற்காக பள்ளி மாடியிலிருந்து தலைகீழாக தொங்க வைத்து கடுமையான தண்டனையை கொடுத்துள்ளார்.   அஹ்ரௌராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளி என்கிற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சோனு யாதவ் என்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த வியாழக்கிழமையன்று உணவு இடைவேளையின் பொழுது மாணவர்கள் சாப்பிடும் போது இந்த சிறுவன் சோனு மட்டும் சாப்பிடாமல் குறும்பு செய்திருக்கிறான்.


இதனை கவனித்த அப்பள்ளியின் முதல்வருக்கு அதிகப்படியான கோவம் வந்தது. மாணவனின் இந்த தொடர் குறும்பு செயலால் ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர்,விறுவிறுவென சென்று சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவன் சோனுவின் ஒரு காலை இறுக்கமாக பிடித்து பள்ளி கட்டிடத்தின் முதல் மாடி பால்கனியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்.  இதனால் பயந்து போன சிறுவன் சோனு யாதவ் பயத்தில் கதறி அழுது இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளான். சிறுவன் மன்னிப்பு  கேட்ட பிறகே அந்த ஆசிரியர் அவனை மேலே தூக்கியுள்ளார். 



இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகவே அதனை யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில, மிர்சாபூர் மாவட்ட ஆட்சியர், அவர் மீது புகார் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இந்த புகைப்படங்கள் அதிகளவில் பார்வர்டு செய்யப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஷ்கர் கவனத்திற்கு வரவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்ள அதிகாரிளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் அந்த பள்ளியின் முதல்வர் மீது புகார் அளிக்கவும் கூறியுள்ளார் . 


இந்த சம்பவம் குறித்து சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவிடம் கேட்கப்பட்டபோது , "எனது மகன் மற்ற குழந்தைகளுடன் சாப்பிட செல்லும்போது சிறிது குறும்புத்தனம் செய்துள்ளான், அதற்காக அந்த பள்ளி முதல்வர் இப்படிப்பட்ட கடுமையான தண்டனையை வழங்கி என் மகனை பயமுறுத்தியுள்ளார்" என்று கூறினார்.


ALSO READ அரசுக்கு முன் கையை கட்டிக்கொண்டு இருப்பேன் என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் பாஜக எம்பி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR