தடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..!!
இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த 6 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புத்தாண்டின் மக்களுக்கான நல்ல செய்தியாக, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை அடுத்து ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், பிற நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஒன்பது நாட்களில் சுமார் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகில் பல நாடுகளில் தடுப்பூசி பாடப்படும் பணி தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டனில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த 18 நாட்கள் ஆனது. அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 10 நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 1,238 பேருக்கு மட்டும் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் வெறும் 0.08% பேருக்கு தான் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அவர்களில் 11 பேர் அதாவது 0.0007% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு” எனக் கூறியுள்ளது.
தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சகம், அவர்களது உயிரிழப்பிற்கும் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று கூறியது.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் தொடங்கி வைத்தார். முதல் சில நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாக இருந்தாலும். ஒரு வார காலத்திற்கு பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சூடுபிடித்தது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR