வரலாறு காணாத வெப்பத்தில் தவிக்கும் டெல்லி! மக்கள் அவதி!

வடமாநிலங்களில் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதையும் வாட்டி வதைத்து வரும் கோடை வெப்பமானது இன்னும் குறைந்தபாடில்லை. தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்பமும், அனல் காற்றும் தொடர்கிறது.
இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் இதைதொடர்ந்து அம்மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.