ஹைதராபாத் வெள்ளம்: இந்த வார தொடக்கத்தில் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பேரழிவிற்குப் பிறகு, மீண்டும் சனிக்கிழமை நகரத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பதிவாகியுள்ளது. வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிக்கிழமை மாலை, ஹைதராபாத்தில் பல மணி நேரம் பலத்த மழை பெய்தது, மழை காரணமாக, நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.



ஹைதராபாத்தில் சனிக்கிழமை இரண்டு முறை பலத்த மழை பெய்தது. மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை, மழை காரணமாக பாலாபூர் ஏரியின் அணை உடைந்தது, இதனால் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் ஏற்பட்டது. இடைவிடாத மழை காரணமாக, கிரேட்டர் ஹைதராபாத்தில் பல சாலைகள் தண்ணீரில் நிரம்பின. 


ALSO READ | அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் அரசு பள்ளியாக மாற்றப்படும்: அஸ்ஸாம் அமைச்சர்


கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சியின், பேரிடர் நடவடிக்கை  குழு பணியாளர்கள் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சியின் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் விஸ்வஜீத் காமபதி கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நகரின் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


ALSO READ | இந்தியாவில் COVID-19 மரபணு பிறழ்வு குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe