கொரோனா வைரஸின் மரபணு குறித்து இந்தியா முழுவதும் இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் இந்தியாவில் கொடிய வைரஸில் பெரிய அளவில் பிறழ்வைக் காணவில்லை என்று பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை (அக்டோபர் 17) ஒரு அறிக்கையில் கூறியது. கொரோனா வைரஸ் இந்தியாவில் மரபணு ரீதியாக ஒரே நிலையில் தான் உள்ளது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
பிரதம மந்திரி அலுவலகம் ஒரு அறிக்கையில், "இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இனைந்து நடத்திய இந்தியாவில் SARS-CoV-2 (COVID-19 வைரஸ்) இன் மரபணு ஆய்வில், வைரஸ் மரபணு ரீதியாக சீராகவே உள்ளது என்பது தெரியவந்துள்ளது. வைரஸில் பெரிய அளவில் பிறழ்வு எதுவும் இல்லை. "
நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை, தடுப்பூசி விநியோகம் மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய சிறிது நேரத்திலேயே PMO இந்த அறிக்கையை வெளியிட்டது.
கோவிட் -19 க்கான தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில், தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸில் பெரிய அளவில் பிறழ்வு இருந்தால், அது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை மிகவும் பாதிக்கக்கூடும் என்று பல நிபுணர்கள் கவலை கொண்டிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில சமீபத்திய ஆய்வுகள் கொரோனா வைரஸின் பிறழ்வுகள் தடுப்பூசிகளின் செயல்திறனை பாதிக்காது என்பதைக் காட்டுகின்றன.
ALSO READ | "பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சில் சுமக்கும் ஹனுமன் நான்": Chirag Paswan
செப்டம்பர் மாதம், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் இதுவரை SARS-CoV-2 வைரஸில் பெரிய பிறழ்வுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறியிருந்தார். கடந்த சில வாரங்களாக சேகரிக்கப்பட்ட தேசிய அளவிலானமாதிரிகளை வைத்து அதன் மரபணு தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும், வைரஸின் பிறழ்வுகள் குறித்த ஆய்வு முடிவுகள் அக்டோபரில் கிடைக்கும் என்றும் ஹர்ஷ் வர்தன் முன்னதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
COVID-19 தடுப்பூசியை மக்களுக்கு விநியோகம் செய்வது குறித்த திட்டத்தை தடுப்பூசி விநியோகம் தொடர்பான தேசிய நிபுணர் குழு (NEGVAC) தயாரித்துள்ளது என்பதையும் PMO அறிக்கை வெளிப்படுத்தியது. மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் கலந்தாலோசித்த பிறகு NEGVAC இந்த வரைபடத்தை தயாரித்துள்ளது.
ALSO READ | கொரோனாவிற்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிக முக்கியம்: சுகாதார அமைச்சகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe