மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. கடந்த சில நாட்களாக இடிமின்னல், சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ந்து வருகின்றது. 


இதன் காரணமாக சாலை பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து சாலை தடங்கள், ரயில் பாதைகளில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. எனவே மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, துறைமுகத் தடம் ஆகியவற்றில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


அனைத்து ரயில்களும் ஒருமணி நேரத்திற்கு மேலாக காலதாமதத்துடன் செல்கின்றன. அதேவேலையில் வெளியூர் ரயில்களும் தாமதமாகச் செல்கின்றன. மரைன் டிரைவ், மாகிம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.


இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மும்பை அருகேயுள்ள கடலோர மாவட்டங்களிலும் பல இடங்களில் பலத்த மழை முதல் மிகப் பலத்த மழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்த மழையின் கோரத்தாண்டவத்தினை பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இணயத்தில் பகிர்ந்து வருகின்றனர்!