சிம்லாவில் இருந்து சண்டிகர் செல்ல வெறும் 20 நிமிடம் போதும்!
சிம்லா என்பது சுற்றுள்ளா பிரயர்களின் வாழ்நாள் கனவு ஆகும். ஒருமுறையாவது அங்கு சென்றுவிட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்!
சிம்லா என்பது சுற்றுள்ளா பிரயர்களின் வாழ்நாள் கனவு ஆகும். ஒருமுறையாவது அங்கு சென்றுவிட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்!
ஆனால் சிம்லாவிற்கு செல்ல வேண்டும் எனில் பண செலவினை விட, நேரச் செலவு அதிகம் ஆகும். முன்னதாக சண்டிகரில் இருந்து சிம்லாவிற்கு செல்ல 4 மணி நேர பயணம் தேவைப்படும், இந்த நெடுந்தூர பயணத்தினை மனதில் கொண்டே சிம்லா செல்வதை பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பயண நேரத்தை குறைக்கு விதமாக தற்போது Heli-Taxi Service என்னும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் வெறும் 20 நிமிடங்களில் சண்டிகரில் இருந்து சிம்லா சென்றுவிடலாம்.
பவன் ஹான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் உதவியுடன் சிம்லா அரசு அறிமுகம் செய்துள்ள இந்த வசதியின் மூலம், ஒரு ஹெலி டாக்ஸியில் 19 பேர் பயணிக்கலாம்.
இந்த பயணத்திற்கு வசூளிக்கப்படும் தொகையானது,. ஒரு நபருக்கு ரூ.2999 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஹெலி டாக்ஸி வசதியானது தினமும் காலை சண்டிகரில் 9 மணியளவில் புறப்பட்டு 9.20 மணிக்கு சிம்லாவை சென்றடையும்.
அதே வேலையில் சிம்லாவின் ஜூபார்ஹட்டி விமான நிலையில் இருந்து காலை 8.00 மணியளவில் துவங்கி 8.20 மணியளவில் சண்டிகர் சர்வதேச விமான நிலையத்தினை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகரில் இருந்து சிம்லா செல்லும் நபர்கள் இதுவரை சாலை போக்குவரத்தினை பயண்படுத்தி வந்தனர். சாலை போக்குவரத்தில் பொதுமக்கள் 4 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.