Video: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; 6 யாத்ரீகர்கள் மரணம்; மனம் பதற வைக்கும் காட்சி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாடாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது.
உத்திராகண்ட் ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் செவ்வாய்கிழமை (அக்டோபர் 18, 2022) காலை விபத்துக்குள்ளானது. இதுகுறித்து முதல்வரின் சிறப்பு முதன்மைச் செயலாளர் அபினவ் குமார் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலம் ஃபாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தார்.
கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கருட் சட்டி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது. விபத்து நேரிட்ட செய்தி அறிந்த, நிர்வாகக் குழு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக புறப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது.
பனிமூட்டம் மற்றும் மோசமான புலப்பாடு தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்டது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "முதற்கட்ட தகவல்களின்படி, Bell 407 ஹெலிகாப்டர் VT-RPN மோசமான வானிலை காரணமாக கேதார்நாத்தில் இருந்து குப்தகாஷி செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது" என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியாயும் இது குறித்து ட்வீட் செய்துள்ளார், அமைச்சகம் மாநில அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். "கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விபத்து குறித்து தகவல்களை பெற நாங்கள் மாநில அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று சிந்தியா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதல்! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலி
கேதார்நாத் தாம் உத்தரகண்ட் மாநிலத்தில் பக்தர்கள் மேற்கொள்ளும் சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதியாகும். இது, யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத் தளங்களையும் உள்ளடக்கியது.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ