மக்களவைத் தேர்தல்: டிராக்டரில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஹேமா மாலினி
வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் நடிகை ஹேமா மாலினி.
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமா மாலினி தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்த நடிகை ஹேம மாலினி, பின்னர் தன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வயல்பகுதியில் அறுவடை செய்துக் கொண்டிருந்த உழைக்கும் பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரான நடிகை ஹேமா மாலினி, தாமும் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இது விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நடிகையும் தங்களுடன் வயலில் வேலை செய்ததைப் பார்த்து அப்பகுதி விவசாயிகள் வியப்படைந்தனர்.
மதுரா தொகுதியில் பிரசாரத்தை மேற்க்கொண்ட நடிகை ஹேம மாலினி செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. முதலில் கோதுமை அறுவடை செய்த உழவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இன்று உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள வயல்வெளிக்கு சென்று, அங்குள்ள உழவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுரா தொகுதியில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் எம்.பி. ஹேமா மாலினி தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அப்பொழுது தொண்டர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்தப்படியே, மாண்ட் என்ற பகுதிக்கு வந்தபோது, உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள வயல்வெளியில் உழவர்கள் வேலை செய்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த அவர், தனது தனது வாகனத்தை நிறுத்தி வயல்காட்டுக்கு வந்தார்.
வயல்காட்டுக்கு வந்த ஹேமா மாலினி, அங்கு உருளைக்கிழங்குகளை பயிரிட முயற்சி செய்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டரில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு இயக்க முயற்ச்சி செய்தார்.
அப்பொழுது, உழவர்கள் ஹேமா மாலினியுடம், நன்றாக இருக்கும் உருளைக்கிழங்குகள் கூட கெட்டு விடுகிறது. இதனால் எங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள்.
அதற்க்கு பதில் அளித்த எம்.பி. ஹேமா மாலினி, விவசாயிகள் கஷ்டப்படுவதை எங்கள் அரசாங்கம் புரிந்துக் கொண்டுள்ளது. மோடி அரசாங்கம் விவசாயிகள் கஷ்டப்படக்கூடாத என்பதற்காக தான் தொடர்ந்து வேலை செய்து செய்கிறார் எனக் கூறினார்.