ஜார்க்கண்ட் முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பொறுப்பேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பொறுப்பேற்றார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டபேரவையில் (Jharkhand Election Results 2019) காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்களில் பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று மதியம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவிப்பிரமாணம் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.