குஜராத்தில் பாகிஸ்தான் ஹீரோக்கள் என்ற பேனர்களில் பயங்கரவாதிகள் பர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் பேரணி குஜராத் மாநிலம் சூரத்தில் அக்டோபர் 16-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஹீரோக்கள் என்ற தலைப்பிலான பேனரில் பயங்கரவாதிகள் பர்கான் வானி, ஹபீஸ் சயீத் மற்றும் ஒசாமா பின்லேடன் படத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.


நாங்கள் பேரணி நடத்தகூடாது என்று இதுபோன்ற பேனர்கள் வைத்து எங்களை செயல்பட விடாமல் பாரதீய ஜனதா கட்சியினர் தடுக்கின்றனர் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.



இதுதொடர்பாக சூரத் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் யோகேஷ் ஜாத்வானி பேசுகையில்:- பேனர்கள் அனைத்தும் பாரதீய ஜனதா தொண்டர்களால் வைக்கப்பட்டு உள்ளது, அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டம் நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் இதுபோன்ற 8 பேனர்களை நீக்கி உள்ளோம். கெஜ்ரிவால் கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.


இவ்விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் நிதின் பாஜியாவாலா கூறியதாவது:கெஜ்ரிவாலின் சூரத் வருகைக்கு பாரதீய ஜனதா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். பாரதீய ஜனதா தொண்டர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கின்றேன் சில நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவால் புகைப்படம் கருப்பாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அவர்கள் பாரதீய ஜனதாவினர் இதனை செய்தனர் என்று குற்றம் சாட்டினர். ஆனா ல், பின்னர் தெரியவந்தது ஆம் ஆத்மி தொண்டர் அஜித் திவாரிதான் அதனை செய்தது என்று. அவர்கள் பொதுமக்களின் கவனத்தை இழுக்க இதுபோன்று செய்கிறார்கள், பின்னர் எங்கள் மீது அவதூறு பரப்ப முயற்சி செய்கிறார்கள். பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு எந்தஒரு சம்பந்தமும் கிடையாது.