குஜராத்தில் பிடிபட்ட ₹21,000 கோடி மதிப்பிலான 3 டன் போதைப் பொருட்கள்!
உலக அளவில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்திரா துறைமுகத்தில் ரூ.9000 கோடி மதிப்பில்லான போதைப் பொருட்கள் பிடிபட்டன.
உலக அளவில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்திரா துறைமுகத்தில் ரூ.9000 கோடி மதிப்பில்லான போதைப் பொருட்கள் பிடிபட்டன.
உலக அளவில் செய்யப்பட்டு வரும் போதைப் பொருள் உற்பத்தியில், 80 முதல் 90 சதவீத உற்பத்தி ஆப்கானிஸ்தானில் (Afghanistan) மேற்கொள்ளப்படுகிறது. ஆப்கானிஸ்தான் சமீபத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், போதைப் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்நிலையில். இன்று, இரண்டு கண்டெய்னர்களில் இருந்து, 3 டன் அதாவது, சுமார் 3000 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் இன்று பிடிபட்டுள்ளன என வருவாய் புலனாய்வு அதிகாரிகள்( Directorate of Revenue Intelligence -DRI) தெரிவித்தனர்.
ALSO READ | காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி: இணையம், மொபைல் சேவை துண்டிப்பு
முதல் கண்டெய்னரில் இருந்து 1999.579 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களும், இரண்டாவது கண்டெய்னரில் இருந்து 988.64 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களும் பிடிபட்டது என்றும், இதன் சர்வதேச மதிப்பு சர்வதேச சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி என்று DRI அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருள் படிப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பிடிபட்ட இந்த போதைப் பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் 10 நாள் காவலில் வைக்க புஜ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்றும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சென்னை, அகமதாபாத், தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனைகளையும் நடத்தி உள்ளனர்.
ALSO READ: இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் அணுநிலையங்கள் பட்டியலை பரிமாறிக் கொண்டன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR