காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி: இணையம், மொபைல் சேவை துண்டிப்பு

இந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஊரி செக்டரில்  நடந்துள்ள இரண்டாவது பெரிய ஊடுருவல் முயற்சி இதுவாகும். இந்த ஆண்டு பள்ளத்தாக்கில் மொத்தம் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 21, 2021, 11:02 AM IST
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி: இணையம், மொபைல் சேவை துண்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள மற்றொரு ஊடுருவல் முயற்சி பற்றி தகவல்கள் வந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை-திங்கட்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எதிர்கொள்ள இந்திய இராணுவம் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.

ஊரி செக்டரிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் 6 ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாராமுல்லா மாவட்டத்தின் ஊரி பகுதியில் இணையம் மற்றும் மொபைல் சேவைகளை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். தகவல்களின்படி, பாதுகாப்புக்காக இப்பகுதியில் கூடுதல் இராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பெரிய பகுதி ராணுவப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப் பட்டுள்ளன.

இராணுவம் (Indian Army) இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. எனினும், வெளிவந்துள்ள பல அறிக்கைகளின்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, இராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

"ஒரு ஊடுருவல் முயற்சி (Infiltration Bid) மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் பயங்கரவாதிகளைத் தேடி வருகிறோம். அவர்கள் இன்னும் இந்தப் பக்கத்தில் தான் இருக்கிறார்களா அல்லது அவர்கள் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்ட பிறகு திரும்பிச் சென்று விட்டார்களா என்பது  இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். ஊடுருவல் முயற்சிகளை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்” என்று ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்ட எச்.கியூ 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே ஒரு டிவி சேனலிடம் கூறினார்.

ALSO READ:காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை!

சமீப காலங்களில் இது இரண்டாவது முயற்சி

ஒரு ஊடக அறிக்கையின்படி, சமீபத்தில் பந்திபோரா மாவட்டத்தில் ஒரு பயங்கரவாத குழு இந்திய இராணுவத்தால் அழிக்கப்பட்டது. சமீப காலங்களில் ஊடுருவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் மற்றொரு குழுவைப் பற்றி இராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு காஷ்மீர் (Kashmir) பள்ளத்தாக்கில் உள்ள ஊரி செக்டரில்  நடந்துள்ள இரண்டாவது பெரிய ஊடுருவல் முயற்சி இதுவாகும். இந்த ஆண்டு பள்ளத்தாக்கில் மொத்தம் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிஜ்பெஹாராவில் நடந்த மோதலில் 72 மணிநேரத்திற்குள் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.

ALSO READ: இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் அணுநிலையங்கள் பட்டியலை பரிமாறிக் கொண்டன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News