கொரோனா அறிகுறியை மறைப்பவர் குற்றவாளியாக கருதப்படுவர் -ஷைலாஜா!
கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் எதையும் மறைக்கும் நபர்கள் குற்றவாளியாக கருதப்படுவர் என ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் எதையும் மறைக்கும் நபர்கள் குற்றவாளியாக கருதப்படுவர் என ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சர் ஷைலாஜா செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) பொது சுகாதாரச் சட்டத்தின்படி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் எதையும் ஆதரிக்கும் அல்லது மறைத்து வைத்திருக்கும் மக்கள் குற்ற காரியம் செய்தவர்களுக்கு ஒப்பாவர் என தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனமான ANI-யுடன் பேசிய ஷைலாஜா, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நாடுகளில் இருந்து திரும்பி வருவதற்கான பயண வரலாற்றை வெளிப்படுத்தாத மக்கள் குற்றவாளியாக கருதப்படுவார்கள் என தெரிவித்தார்.
"வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்களுக்கு தொற்று இருக்கும் பட்சத்தில், அவர்கள் மூலம் பலருக்கு தொற்று மேலும் பரவலாம். எனவே அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தவும் சுகாதாரத் துறையைத் தொடர்பு கொள்ளவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயண வரலாற்றை மறைப்பது குற்றம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார், தொற்றை சரிசெய்ய சரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுகாதார அமைச்சர் ஷைலாஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செவ்வாயன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தில் இருந்து மேலும் 6 பேர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாகவும், கேரளாவில் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 12-ஆக உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் ஏழாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மார்ச் 31 வரை இடைநிறுத்தப்படும் என்றும் முதல்வர் விஜயன் கூறினார். இருப்பினும், 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கால அட்டவணையின்படி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் மார்ச் 31 வரை இடைநிறுத்தப்படும். 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கால அட்டவணையின்படி நடத்தப்படும். அனைத்து விடுமுறை, கல்வி வகுப்புகள், அங்கன்வாடிகள், மெட்ராஸாக்கள் மார்ச் 31 வரை அடைக்கப்பட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.