`நீட்` தேர்வில் வயது உச்சவரம்பு விதிமுறைக்கு உயர்நீதிமன்றம் தடை!
நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொது பிரிவினர் எழுத முடியாது என்ற விதிமுறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.
அதைதொடர்ந்து, சமீபத்தில் நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொது பிரிவினர் எழுத முடியாது என்ற சிபிஎஸ்இ அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிக்கைக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.