நாகலாந்து மாநிலம் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோன் மாவட்டத்தில், நம்பகமான உளவுத் தகவலின் அடிப்படையில் ராணுவம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, ஒடிங் என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், மீது    தவறுதலாக,  ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு  மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர்,  தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என நினைத்து தவறுதலாக  துப்பாக்கிச்சூடு நடத்திய இந்த சம்பவம் பெரும் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது. 


நாகாலாந்து படுகொலை சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம் அச்சம்பவம் குறித்து உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.


ALSO READ | இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை!


இந்த சம்பவத்தை "துரதிர்ஷ்டவசமானது" என்று கூறிய ராணுவம், "சம்பவம் மற்றும் அதன் பின்விளைவுகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியது.


நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ (Neiphiu Rio), மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் கிராமத்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.


தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தை கேள்வி பட்டு மனம் மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  நாகலாந்து அரசு பதற்றம் நிறைந்த பகுதியில் இணையதள சேவைகளை தடை செய்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ:இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR