இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை!

இந்தியாவின் வயது வந்தோரில் பாதி பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2021, 04:20 PM IST
இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை! title=

புதுடெல்லி: இந்தியாவின் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியான வயது வந்தோரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

"வாழ்த்துக்கள் இந்தியா. தகுதியான மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானோர் இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது, இந்தியாவிற்கு மிகவும் பெருமைக்குரிய தருணம். கோவிட்-19 க்கு எதிரான போரில் நாம் இணைந்து போராடி வெற்றி பெறுவோம்" என்று மாண்டவியா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டதன் மூலம், நாட்டில் கொடுக்கப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி அளவுகள் 127.61 கோடியைத் தாண்டியுள்ளதாக முன்னதாக வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

ALSO READ | Breaking! Omicron Alert: டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான் வைரஸ்

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16 அன்று முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு (HCWs) தடுப்பூசி போடப்பட்டது. முன் கள பணியாளர்களுக்கான தடுப்பூசி (FLWs) பிப்ரவரி 2 அன்று தொடங்கியது.

கோவிட்-19 தடுப்பூசியின் அடுத்த கட்டம் மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடங்கியது.

பின்னர்,  ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கியதம் மூலம் அதன் தடுப்பூசி இயக்கத்தை விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News