கர்நாடகாவில், கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வர தொடங்கினர்.  இது சீருடை விதியை மீறும் செயல் என பள்ளி நிர்வாகம், இவர்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காததை அடுத்து ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அதிரடி தீர்ப்பை வழங்கியது. கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை என்று கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டது.


ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என்று தெரிவித்த கர்நாடக உயர்நீதிமன்ற சட்ட அமர்வு, ஹிஜாபுக்கு தடை விதித்தது செல்லும் என்று தெரிவித்தது.


மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!


இந்நிலையில், தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் வந்துள்ளது. சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக  காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்குமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பை வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவர்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20, 2022)  முடிவு செய்தது.


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடந்த போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகவும் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR