`பள்ளியை விட ஹிஜாப் தான் முக்கியம்` மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற தந்தை -VIDEO
Hijab Row: எனது குழந்தையை ஹிஜாப் இல்லாமல் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு பள்ளியிலிருந்து மகளை அழைத்துச் சென்ற தந்தை.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கௌசியா பள்ளியில், ஹிஜாப் அணியக்கூடாது என பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளதால், முஸ்லிம் பெண்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள கௌசியா பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை உள்ளே அனுமதிக்காததால், அவரது தந்தை, "எங்களுக்கு பள்ளியை விட ஹிஜாப் முக்கியம்" என்று ஆசிரியர்களிடம் கூறிவிட்டு, தனது மகளை அழைத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினார்.
இதுக்குறித்து வீடியோவை ட்விட்டரில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், அங்கு இருக்கும் ஆசிரியர்களிடம், தனது குழந்தையை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு தந்தையை கோருவதைக் காணலாம். அதேநேரத்தில் "எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று ஆசிரியர் குறிப்பிடுவதைக் காணலாம்,.
பள்ளியை விட ஹிஜாப் தான் எங்களுக்கு முக்கியம்:
மாண்டியாவில் உள்ள கௌசியா பள்ளியில் இருந்து தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது "பள்ளியை விட ஹிஜாப் தான் எங்களுக்கு முக்கியம்" சாதிக் பாஷா கூறுகிறார். பள்ளி ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்த பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்ததால், என் குழந்தையை அனுப்புவதில் எனக்கு சிக்கல் உள்ளது. எனது குழந்தையை ஹிஜாப் இல்லாமல் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறினார்.
மேலும் படிக்க: பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் எதை அணிவது என்பது பெண்களின் உரிமை: பிரியங்கா காந்தி
திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்:
அதேபோல ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுத்ததால் அவர்கள் தேர்வை புறக்கணித்தனர். இதுக்குறித்து பேசுகையில், ஒரு மாணவர், "நான் ஹிஜாபை கழற்ற மாட்டேன். முன்பு நான் ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்குச் சென்றேன். ஹிஜாபை அகற்றுங்கள் அல்லது இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று பள்ளி நிர்வாகம் கூறியது. ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எங்களை பள்ளி அனுமதிக்கவில்லை என்றார். அதேநேரம், ஹிஜாபை கழற்றச் சொன்னதால், இந்தப் பள்ளியையும், தேர்வையும் விட்டுவிடுகிறேன் என்று மற்றொரு மாணவர் கூறினார்.
மாணவியை பள்ளிக்கு அனுப்ப பயம்:
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் உறவினர்கள், "பள்ளியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட பிறகு, மாணவியை பள்ளிக்கு அனுப்பவில்லை. அந்த மாணவி 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராக வேண்டியிருந்ததால், இரண்டு நாட்கள் பள்ளிக்கு அனுப்பினேன். ஆனால் மாணவி ஹிஜாபைக் கழற்ற மறுத்ததால் சில மாணவர்களை தனி அறையில் உட்காரச் சொன்னார்கள். ஆனால், "முன்பு இப்படி எதுவும் நடந்ததில்லை. இதுவரை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் ஹிஜாப் அணிந்து இந்தப் பள்ளியில் படித்துள்ளனர். விதிகளில் திடீர் மாற்றம் ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: ஹிஜாப் சர்ச்சை: உடுப்பியில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்
கல்வியும் முக்கியம்.. ஹிஜாப் முக்கியம்:
அதே சமயம், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகுதான் எனது மகளை பள்ளிக்கு அழைத்து வருவேன் என்று சிலர் கூறினார். கல்வி முக்கியமானது. ஆனால் அதேநேரம் ஹிஜாப் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றனர்.
மீண்டும் தனி அறையில்...:
பள்ளியில் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று ஆசிரியர்கள் மாணவர்களை கேட்டுக் கொண்டதாக சிலர் தெரிவித்தனர். இது தொடர்பாக பெற்றோருடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால் இன்று அவரிகளை தனி அறையில் உட்கார வைத்துள்ளனர். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை. மாணவர்கள் படித்து தேர்வெழுத உரிமை உண்டு என சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்க: Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!
கர்நாடக ஹிஜாப் வழக்கு:
கர்நாடக ஹிஜாப் வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை. வழக்கை விசாரித்த பெஞ்ச் விசாரணையை பிப்ரவரி 16 வரை நீட்டித்துள்ளது. ஆனால், இந்த ஹிஜாப் சர்ச்சையை தேர்தலில் சாதகமாக்கிக் கொள்ள முயற்சி நடப்பதால், மார்ச் மாதத்துக்குப் பிறகு விசாரணை நடத்த வேண்டும் என்று தேவ்தத் காமத் முன்பு கூறியிருந்தார். அதற்கு நீதிபதிகள், "இது தேர்தல் கமிஷன் சம்பந்தப்பட்ட விஷயம், இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை" என்று கூறினார்.
மேலும் படிக்க: ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR