விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி லோக்கல் இருந்து வந்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Nov 6, 2024, 10:11 AM IST
    எந்த திசையில் யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி
    விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி.
    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை.
விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!  title=

கிராம ஊராட்சிகளில் மட்டும் வழங்கப்படும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரைவில் நகர பகுதிகளில் தொடங்குவதற்கு முதல்வரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விழுப்புரம் சட்டக்கல்லூரியில் கலைஞர் விளையாட்டு  உபகரணங்கள் வழங்கும் விழா தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா விழுப்புரம் ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | ’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலதாமதாக விழாவிற்கு வருகை புரிந்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என தெரிவித்து கொண்ட அவர், உழைக்கும் மக்கள் அதிமகமாக உள்ள மாவட்டமாக  விழுப்புரம் உள்ளதாகவும் விழுப்புரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் தான் கலந்து கொண்டு வழங்கியதாகவும், அப்போது தனக்கு தெரியாது தான் விளையாட்டு துறை அமைச்சராக வந்து மீண்டும் விழுப்புரத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவேன் என கூறினார். கிராம புறத்தில்  உள்ளவர்கள் விளையாட்டு துறையில் வளர வேண்டும் என்பதால் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

ஆண்களை விட பெண்கள் விளையாட்டு துறையில் வளர வேண்டும்,என்றும் திறமைக்கு பணம் தடையாக இருக்க கூடாது என்று திராவிட மாடல் அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.  கிராமத்தில் உள்ள வீரர்கள் பயன்பெற ஊராட்சிகள் தோறும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துங்கப்பட்டுள்ளதற்கு ஏன் கலைஞர் விளையாட்டு  உபகரணங்கள் என பெயர் சூட்டபட்டுள்ளது என்றால் கலைஞர் கருணாநிதி விடாமுயற்சி, கடின உழைப்பு, சோர்வின்மை, குழுவாக செயல்படுவது போன்ற விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருந்ததால் தான் அவரின் பெயரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதாக கூறினார். 

விளையாட்டு துறை மட்டுமல்ல மகளிருக்குமான அரசாக திமுக அரசு செயல்படுவதாகவும்,  காலை உணவு திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருவதாகவும், 1 கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைஉரிமை தொகை பெற்று வருவதாக கூறினார். தமிழ்நாடு 13 துறைகளில் முதன்மையாக உள்ளதாக ஒன்றிய அரசு புள்ளியியல் துறையே பாராட்டி உள்கதாகவும் பெண்கள் தமிழகத்தில் 43 சதவிகிதம் பணிக்கு செல்வதாகவும், மக்களின் மகிழ்ச்சியே திமுக அரசின் நல்லாட்சிக்கு சான்று என்றும் கிராம ஊராட்சிகளில் மட்டும் வழங்கப்படும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் விரைவில் நகர பகுதிகளில் தொடங்குவதற்கு முதல்வரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி உறுதி - உதயநிதி ஸ்டாலின்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு குறித்து சென்றிருந்தார். அப்போது அவர் திருவெண்ணைநல்லூரில் கலைஞர் வெண்கல சிலையை திறந்து வைத்த பின்பு மேடையில் பேசிய அவர் எந்த கூட்டணி அமைந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்தாலும் லோக்கலில் இருந்து யாராக வந்தாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும் கண்டிப்பாக 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். திருவெண்ணைநல்லூரில் விஜய்க்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | 'வசவாளர்கள் வாழ்க...' விஜய் குறித்து மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் - என்ன சொன்னார் பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News