இமாச்சல் கனமழை: அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் விடுமுறை
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை பெய்வதால் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை காரணமாக பீஸ் நதியில் வெள்ளம் ஏற்ப்பட்டு உள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்ப்பட்டதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. 200க்கும் மேற்பட்ட சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலாத்தளமான குலு, சிம்லா, மணாலி போன்ற பகுதிகளுக்கு தடை விதிக்கப்ட்டு உள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்க்ரா மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆங்கன்வாடி மையங்களும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு குழு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர்.