முதல்வரின் சமோசா காணவில்லை... அதை கண்டுபிடிக்க சிஐடி விசாரணையா...? பின்னணி இதுதான்!
Himachal Pradesh Samosa Controversy: ஹிமாச்சல் பிரதேசத்தில் நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு வழங்கப்பட இருந்த சமோசாக்கள் அடங்கிய பெட்டிகள் காணாமல் போனதாகவும், அதுகுறித்து சிஐடி விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Himachal Pradesh Samosa Controversy: ஹிமாச்சல் பிரதேசத்தின் அரசியல் களம் தற்போது சமேசாவால் பெரும் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது என சொன்னால் நம்ப முடிகிறதா... ஆம், அதுதான் உண்மை. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கலந்துகொண்ட அரசு விழாவில், அவருக்காக கொண்டுவரப்பட்ட சமோசாக்கள் காணாமல் போனதாக பெரும் சர்ச்சை உண்டாது. சிஐடி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவின்போதுதான் சமோசாக்கள் அடங்கிய பெட்டிகள் காணாமல் போயுள்ளது. காணாமல் போன அந்த சமோசா பெட்டி குறித்து தற்போது சிஐடி விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதிகாரிகள் மறுப்பு
இருப்பினும், அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக எவ்வித விசாரணையும் நடக்கவில்லை எனவும், தங்களின் உள்விவகாரம் பொதுவெளியில் தவறாக பகீரங்கப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஹிமாச்சல் பிரதேசத்தின் சிஐடி பொது இயக்குநர் சஞ்சிவ் ரஞ்சன் ஓஜா கூறுகையில், தேநீர் இருந்த அதிகாரிகள் கூடியபோது, அதற்கு ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் எங்கே போனது என சாதாரண தேடியது அவ்வளவுதான் என்றார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில்,"எங்களின் தலைமையகத்திற்கு ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முதல்வர் கலந்து கொண்டார். விழா முடிந்ததும், அதிகாரிகள் அமர்ந்து தேநீர் அருந்தினர். இதற்காக சில பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகவும், அது என்ன ஆனது என கேட்டுள்ளனர். இது மட்டும் தான் நடந்தது. இது முற்றிலும் சிஐடியின் உள் விவகாரம் சார்ந்தது ஆகும. அதை ஊதிப் பெரிதாக்கி அரசியலாக்கியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் குறிவைக்கப்படுவதும் வருத்தமளிக்கிறது" என்றார்.
மேலும் படிக்க | வணிகத்துக்கு எதிரானவன் அல்ல: ராகுல்
முதல்வர் தரப்பில் கூறுவது என்ன?
மேலும் முதலமைச்சர் அலுவலகமும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் ஊடக ஆலோசகரான நரேஷ் சௌகான் கூறுகையில்,"அத்தகைய விசாரணைக்கு அரசு ஏதும் உத்தரவிடவில்லை, அதற்கும் இந்த விஷயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் தங்களுக்குள்ளேயே விசாரித்துள்ளனர். அதிலும், முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட குளிர்பானம் யாருக்கு வழங்கப்பட்டது?. பாஜகவுக்கு எங்களை குறித்து பேச எதுவுமே இல்லை என்பதால், இந்தப் பிரச்னையின் மூலம் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது" என்றார்.
அந்த 3 பெட்டிகளுக்கு என்ன ஆனது?
முன்னதாக, சிஐடி அதிகாரிகள், பணியில் இருந்த சுற்றுலாத் துறை ஊழியர்களிடம், பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை முதலமைச்சருக்கு வழங்கலாமா என்று கேட்டதாகவும், இவை முதல்வரின் மெனுவில் இல்லை என அவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. முதலமைச்சருடன் வரும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு சில அதிகாரிகள் பொறுப்பேற்றதாகவும் கூறப்பட்டது.
மூன்று பெட்டிகளுக்குள் இருந்த ஸ்நாக்ஸ்களை முதல்வருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அந்த மூன்று பெட்டிகளும் திறக்கப்படாமல் அப்படியே MT பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பெண் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த உணவுப் பொருட்கள் அவரது உத்தரவின் பேரில் ஐஜி அறையில் அமர்ந்திருந்த 10-12 பேருக்கு தேநீருடன் பரிமாறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து உள்வட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் எடுக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹோட்டல் ரேடிசனில் இருந்து கொண்டு வரப்பட்ட சமோசாக்கள் அடங்கிய இந்த 3 பெட்டிகள் குறித்து எஸ்ஐ தரவரிசையில் உள்ள அதிகாரி ஒருவருக்கு மட்டுமே முழுவதுமாக தெரியும் என்பது கூறப்பட்டது. இருப்பினும், முதல்வரின் வருகையால் காவல் ஆய்வாளர் தரவரிசையில் உள்ள பெண் அதிகாரியால் அந்த பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பெட்டிகள் எஸ்.ஐ., நிலை அதிகாரியின் முன்னிலையில் திறக்கப்பட்டு, முதல்வருடைய தனிப்பட்ட ஊழியர்களுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அந்த பெண் அதிகாரி, எந்த உயர் அதிகாரியையும் கேட்காமல், இந்த பொருட்களை எம்டி பிரிவில் ஒப்படைத்தார் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியான பாஜகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர் மரணம் - பயணிகளின் உயிர்காத்த நடத்துநர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ