பாகிஸ்தானைச் சேர்ந்த 18 இந்து அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்த குஜராத்! சிஏஏ நடைமுறைக்கு வந்தது!
Indian Citizenship Under CAA: இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து வந்த 18 இந்து அகதிகளுக்கு, மார்ச் 16ம் தேதியன்று அகமதாபாத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது...
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே குஜராத் மாநிலத்தில் 18 இந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. CAAவின் கீழ் இந்திய குடியுரிமை: குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஐ அமல்படுத்திய நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 18 இந்து அகதிகளுக்கு நேற்று (2024, மார்ச் 16 சனிக்கிழமை) இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
நேற்றைய குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு, அகமதாபாத்தில் வசிக்கும் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளில், இதுவரை மொத்தம் 1167 இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் கலந்துக் கொண்ட குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கினார். அப்போது பேசிய அவர், புதிய இந்தியா என்ற கனவை நனவாக்க அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க - குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங்
இந்திய குடியுரிமை பெற்ற 18 பேரும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதில் உறுதியாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கேட்டுக் கொண்ட அவர், இந்திய குடியுரிமை பெற்ற அனைவரையும் சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த சிறுபான்மையினருக்கு எளிதாகவும் விரைவாகவும் இந்திய குடியுரிமை வழங்க சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது" என்று குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்
மத்திய அரசு,மார்ச் 11ஆம் தேதி திங்கள்கிழமையன்று குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) அமல்படுத்தியது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளையும் மத்திய அரசு அறிவித்தது, அதன் அடிப்படையில் தற்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தம் சட்டம்
இந்திய அரசாங்கம். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பான விதிகளை மார்ச் 11, திங்கட்கிழமை அறிவித்தது. 31 டிசம்பர் 2014க்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு (இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்) இந்திய குடியுரிமை வழங்குவதே சிஏஏவின் நோக்கமாகும்
சட்ட திருத்தத்தின் அவசியம்
வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே இந்த சட்டத் திருத்ததின் முக்கிய நோக்கமாகும். இது இந்தியாவின் அண்டை நாடுகளின் வசிக்கும் சிறுபான்மையினரின் மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும். குடியுரிமை முறையைத் சட்ட வர்வம்பிற்குள் கொண்டுவரவும், சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்கவும் இந்தச் சட்டம் தேவைப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ