பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன கேரளா மாநிலம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல்வேறு  மாநிலங்களில் இருந்து லட்ச கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள்.ர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி, கோபத்துடன் கிளம்பிச் சென்று, ஓய்வெடுத்த இடம் ஆற்றுக்கால். அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் அமைத்து மாசி மாத பூரத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது  


இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மாசி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் பொங்கல் வைத்து கண்ணகியை வழிபடுகின்றனர்.  


இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். சுமார் 15  கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது. பல லட்சம் பெண்கள் குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு உலக சாதனையை ஏற்படுத்தினர்கள். இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.


ஆண்டு தோறும் பொங்கல் வழிபாடு அதிகாரித்து வருவதால் இந்த சாதனையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பொது இடங்களில் பொங்கல் இட அனுமதி இல்லாத காரணத்தால் பக்தர்கள் இந்த பொங்கல் வழிபாட்டில் கலந்து கொள்ளவில்லை.


மேலும் படிக்க | ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!


 இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த பிப்ரவரி 27 ல்  திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 8 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும். ஆற்றுகால் பொங்கலையை  முன்னிட்டு இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு கேரளா அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  பொங்கலிட வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


சுமார் 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10.30 மணிக்கு கோயில் தந்திரி ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து தலைமை பூசாரி முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாடை துவங்கி வைத்தார். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.


திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது மதியம் 2.30 நிவேத்திய பூஜையுடன் பொங்கல் வழிபாடு நிறைவடையும். அப்போது குட்டி விமானம் மூலம் பொங்கல் வழிபாடுகளில் அர்ச்சனை பூக்கள் தூவபடுகின்றது.


மேலும் ஆலய நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பகதர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களும் பொங்கலிட்டு வழிபாடு செலுத்தினார்கள்.கோயிலின் முன்புறம் அமைக்க பட்டுள்ள பச்சை பந்தலில் தோற்றப்பாட்டு என்று அழைக்கப்படும் கண்ணகி பாட்டு நடைபெற்றது. 


மேலும் படிக்க | கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு


ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத்தகடால் வேயப்பட்டது. கோவிலில் சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.


நுழைவாயிலின் மேல் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன.


மூலவிக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை கோவில் என்று அழைக்கப்படுகிறது. வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.


மேலும் படிக்க | கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ