வங்கதேசத்தில் 15க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கதேசத்திலுள்ள ஹரின்பெர் கிராமத்தை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ் என்பவர் முஸ்லீம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்ததாக தெரிகிறது. இது தொட ர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாசிர்நகரில் நூற்றுக்கணக்கான மதரசா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடை செய்தனர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் நாசிக்நகரிலுள்ள 15-க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்ட இந்துக்கள் வசிக்கும் வீடுகளில் கொள்ளைய டுத்தி உள்ளனர். இச்சம்பவத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து நாசிர்நகர் , மதப்பூர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். வங்கதேச போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து கோயில்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.