கர்நாட்டகாவில் நடைப்பெற்று வரும் அரசியல் நாடகம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கதினில் கிண்டல் அடித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தனி கட்சி பெருன்பான்மை என்னும் பெயரில் கர்டாட்டகவில் ஆட்சி அமைத்தது. இதன் அடையாளமாக கர்நாட்டக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார், மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையை நிரூபிக்க காத்துள்ளார். 


கர்நாட்டகாவில் 104 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக 78 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸும், 38 இடங்களை பெற்றுள்ள JDS-ம் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கு உரிமை கோரின. எனினும் கர்நாட்டக ஆளுநர் எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமானம் செய்து வைத்தார்.



இதனையடுத்து பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதவராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் JDS உறுப்பினர்கள் கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கிடையில், முடிந்த தேர்ததலில் வெற்றிப்பெற்ற MLA-க்கள் கர்நாட்டக ரெஸாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..."116 MLA-க்களை தங்கள் வசம் வைத்துள்ள ரெஸார்ட் உரிமையாளர் கூட ஆட்சியமைக்க உரிமை கோரலாம்" என குறிப்பிட்டுள்ளார்.