ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.25% ல் இருந்து 6% ஆக குறைப்பு: RBI
வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 25 பேசிஸ் புள்ளிகள் அல்லது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதனால், தற்போது ரெப்போ ரேட் விகிதம் 6 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதன் மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகியவற்றை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.25 சதவீதத்தில் இருந்து குறைந்து 6 சதவீதமாக இருக்கும். அதேபோல் வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 6.5% லிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-20 க்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தை 7.4 சதவீதமாக 0.2 சதவீதமாக குறைத்தது. மத்திய வங்கி மேலும் 4 வது காலாண்டில் சில்லறை பணவீக்க மதிப்பீடு 2.4% ஆகவும், H1 FY20 இல் 2.9-3% மற்றும் H2 FY20 இல் 3.5-3.8% ஆகவும் திருத்தப்பட்டது.