அமித் ஷா COVID-க்குப் பிறகான பராமரிப்பு முடிந்து AIIMS-சிலிருந்து வீடு திரும்பினார்!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து (AIIMS) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) COVID-க்கு பிந்தைய உடல் நல கவனிப்புகள் நிறைவடைந்து அனுப்பப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து (AIIMS) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) COVID-க்கு பிந்தைய உடல் நல கவனிப்புகள் நிறைவடைந்து அனுப்பப்பட்டார். ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஷா AIIMS-ல் அனுமதிக்கப்பட்டார்.
AIIMS சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ஷா முழுவதுமாக குணமடைந்து விட்டதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் AIIMS கூறியிருந்தது.
“மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, புதுடெல்லியின் AIIMS-ல் COVID-க்கு பிறகான பராமரிப்புக்காக அனுமதிக்கப்படுகிறார். அவர் குணமடைந்துவிட்டார். விரைவிலேயே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று AIIMS தரப்பில் கூறப்பட்டது.
அமித் ஷாவுக்கு ஏற்பட்ட சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அவர் ஆகஸ்ட் 18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சைப் பெற்றுவந்த அமித் ஷா, பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததையடுத்து, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும், அதன் பிறகு சில நாட்களில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அவர் AIIMS-ல் அனுமதிக்கப்பட்டார்.
ALSO READ: உள்துறை அமைச்சர் அமித்ஷா நலம்; மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார்
ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஷா கொரோனா வைரஸ் கோவிட் -19 க்கு எதிர்மறையை பரிசோதித்தார். வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் உள்துறை அமைச்சர் ஷா, தானே தனது சோதனை முடிவுகளை அறிவித்திருந்தார்.
"இன்று எனது கொரோனா சோதனை அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், என்னை வாழ்த்தி என்னையும் என் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின் படி, இன்னும் சில நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பேன்.” என்று ஷா ட்வீட் செய்திருந்தார்.
ALSO READ: இந்தியாவில் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!