புதுடெல்லி: இன்று மாநிலங்களவையில் டெல்லி வன்முறை (Delhi Violence) குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Home minister Amit Shah) பதிலளித்தார். டெல்லியில் கலவரக்காரர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நிச்சயமாக கண்டு பிடிக்கப்படுவார்கள் என்று அமித் ஷா கூறினார். இந்த கலவரங்களை மோடி அரசு நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி வன்முறை (Delhi Violence) தொடர்பாக காவல்துறையினர் மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், "என் மீது குற்றம் சாட்டுங்கள். ஆனால் டெல்லி காவல்துறை (Delhi Police) மீது அல்ல. 36 மணி நேரத்திற்குள் வன்முறையை காவல்துறை கட்டுப்படுத்தியுள்ளது. 13 சதவீத பகுதிகளில் கலவரங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது காவல்துறையின் வெற்றி என்று கூறினார். 


மேலும் படிக்க: டெல்லி வன்முறை ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை - மம்தா பானர்ஜி!


யாருடைய வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன, யாரெல்லாம் தனது சொந்தங்களை இழந்தார்களோ, அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். ஒரு கலகக்காரர் கூட இங்கிருந்து தப்பிக்கு முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார். மேலும் "இன்றுவரை 700 க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றும் அமித் ஷா (Amit Shah) கூறினார்.


மேலும் படிக்க: டெல்லி வன்முறை: உயிரிழந்த IB அதிகாரி குடும்பத்திற்கு ₹.1 கோடி இழப்பீடு


மேலும் அமித் ஷா (Amit Shah) கூறுகையில், டெல்லியில் வன்முறைக்கும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் வீட்டிலிருந்து பல ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. கலவரம் தணிந்த பின்னர், ஆம் ஆத்மி கட்சி (AAP) இராணுவத்தை கொண்டுவர சொன்னது. கலவரம் தணிந்த பின்னர் இராணுவம் எவ்வாறு கொண்டுவர முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க: வன்முறையில் ரத்தன்லால் எவ்வாறு கொல்லப்பட்டார்? VIRAL VIDEO


உள்துறை அமைச்சர் கூறுகையில், குடியுரிமைச் சட்டம் (CAA) இயற்றப்பட்டதிலிருந்து டெல்லியில் மக்கள் வன்முறை ஆர்ப்பாட்டங்களை கண்டனர். குடியுரிமைச் சட்டத்தால் நாட்டு மக்களின் குடியுரிமையும் பறிக்கப்படாது. CAA சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று காங்கிரஸ் பொய் கூறுகிறது என்றார்.