எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் குடியுரிமை சட்டத்தை மோடி அரசு அமல் செய்யும்: அமித் ஷா
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் காரணமாக யாருடைய தேசியமும் இழக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தார்.
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act) எதிராக வன்முறை எதிர்ப்புக்கள் இருந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), "எவ்வளவு எதிர்ப்பு தொடர்ந்தாலும் பாரதீய ஜனதா (BJP) கட்சியின் அரசு அனைத்து அகதிகளுக்கும் இந்தியாவின் குடியுரிமையை வழங்கும் எனக் கூறியுள்ளார்.
"அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும்" என்று அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். அவர் இந்தியாவின் குடிமக்களாக மாறி மரியாதையுடன் வாழ்வார்கள். நீங்கள் எந்த அரசியல் எதிர்ப்பைச் செய்ய வேண்டுமென்றாலும் அதைச் செய்யுங்கள். ஆனால் இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மோடி அரசு உறுதியாக உள்ளது என்று நான் அனா`அனைவருக்கும் கூற விரும்புகிறேன் எனக் கூறினார்.
குடியுரிமை திருத்த மசோதாவில் யாருடைய குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. அதில் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடு மட்டுமே உள்ளது என்று உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தினார். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில், மதத் துன்புறுத்தலுக்கு ஆளான பின்னர் இங்கு வந்துள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்கும்.
நான் அதை உறுதியளிக்கிறேன்:
மேலும் பேசிய அமித்ஷா, "இந்த நாட்டின் குடிமக்களாக இருக்கும் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்த நாட்டின் குடிமக்களாக இருக்கும் எந்த முஸ்லிமுக்கும் அநீதி இழைக்க மாட்டான். நான் அதற்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.
CAA சட்டத்தை எதிர்க்க வேண்டாம்:
"இந்த சட்டத்தை எதிர்க்கும் அனைவருக்கும் எனது சவால் என்னவென்றால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் சேர்ந்த முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வர விரும்பினால், அவர்களை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள், இந்த சட்டத்தை அதை எதிர்க்க வேண்டாம்.
எந்த மாணவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை:
ஒரு கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, நாட்டில் 400 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் ஜாமியா மில்லியா, ஜே.என்.யூ, லக்னோ மற்றும் ஏ.எம்.யூ ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மற்ற எல்லா பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என வதந்தி பரவி வருகிறது. எந்த மாணவர் மீதும் எடுக்கப்படவில்லை. வடகிழக்கில் படிப்படியாக அமைதி நிலவுகிறது, மூன்று நாட்களாக அங்கு வன்முறை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.