ஒரு நேர்மையான NCP உறுப்பினர் ஒருபோதும் BJP-க்கு ஆதரவு தர மாட்டார்கள்: சரத் பவார்
என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.
13:06 23-11-2019
"மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அரசாங்க அமையா வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம்: சரத் பவார்.
13:05 23-11-2019
ஷரத் பவார் கூறுகையில், "54 எம்.எல்.ஏ.க்களின் கையொப்பங்கள் உள்ளது எனக் கூறுவது உண்மை இல்லை. ஆளுநர் ஏமாற்றப்பட்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆளுநர் பெரும்பான்மையை நிருபிக்க சொல்லும் போது, அவர்களால் அதை செய்ய முடியாது எனக் கூறினார்.
12:59 23-11-2019
எனக்கு தெரிந்த தகவலின் படி, 10-11 என்சிபி உறுப்பினர்கள் சென்றிருந்தனர். ஒவ்வொரு எம்எல்ஏவும் எங்களுடன் தொடர்பு கொண்டார்" என்று ஷரத் பவார் கூறினார். மேலும் ராஜ் பவனில் இருந்து டாக்டர் ஷெண்ட்ஜ் அவரை சந்திக்க வந்ததாக பவார் கூறினார்.
12:58 23-11-2019
பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஷரத் பவார், "யார் சென்றார்கள், யார் செல்லப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. நான் அவர்களுக்கு இரண்டு விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்- கட்சி தாவல் தடை சட்டம் உள்ளது, எனவே அவர்களின் முயற்சிகள் வீணாகிவிடும்" என்றார்.
12:55 23-11-2019
இது என்சிபி சித்தாந்தத்திற்கு முற்றிலும் முரணானது. ஒரு நேர்மையான என்சிபி உறுப்பினர் ஒருபோதும் பாஜக அரசாங்கத்தை உருவாக்குவதில் ஒரு பகுதியாக இருக்க முடியாது. 'நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்.சி.பி எம்.எல்.ஏ என்னுடன் இருப்பார்கள் என்றார் ஷரத் பவார்.
12:52 23-11-2019
"அஜித் பவாரின் கீழ், சில என்சிபி எம்.எல்ஏ-வும் அங்கு சென்றிருந்ததை நான் அறிந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டதை நாங்கள் கண்டோம்" என்று ஷரத் பவார் கூறினார்.
12:50 23-11-2019
"காலை 6.45 மணியளவில் ஒரு சக ஊழியரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் ராஜ் பவனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளோம். மகாராஷ்டிராவில் ராஜ் பவனில் செயல்திறன் இவ்வளவு வேகமாக இருபது ஆச்சரியமாக இருந்தது" என்கிறார் ஷரத் பவார்.
மும்பை: இன்று மதியம் என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர். என்.சி.பி தலைவர் ஷரத் பவார் கூறுகையில், "அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, காங்கிரஸ்-என்.சி.பி, சிவசேனா தலைவர்கள் ஒன்று கூடினர். எங்களிடம் பெரும்பான்மை இருந்தது. சேனா 56, என்.சி.பி 54, காங்கிரஸ் 44. மொத்தம் 156க்கு அதிக இடங்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் சுயேச்சைகள் ஆதரவுடன் எங்கள் எண்ணிக்கையை 170 இடங்களாக உள்ளது எனக் கூறினார்.
யாரும் கற்பனை செய்யாத அளவுக்கு இன்று (சனிக்கிழமை) காலை மகாராஷ்டிர அரசியலில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். வெள்ளிக்கிழமை இரவு வாக்கில், காங்கிரஸ்-என்.சி.பி மற்றும் சிவசேனா அரசாங்கம் அமைக்கும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் மக்கள் காலையில் எழுந்தபோது, தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், என்.சி.பி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்பதைக் கண்டார்கள்.
மாநிலத்தில் அரசாங்கத்தை அமைத்த பின்னர், பாஜகவை ஆதரிக்க அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்று ஷரத் பவார் ட்வீட் செய்துள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஜகவை ஆதரிக்க அஜித் பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஷரத் பவார் கூறினார். அவரது முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் எனவும் கூறியிருந்தார்.
மாநிலத்தின் புதிய துணை முதல்வர் அஜித் பவார், மாநில மக்கள் மற்றும் சத்ரபதி சிவாஜியின் முதுகில் அடித்துள்ளார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கடுமையாக சாட்டினார்.