ரயிலில் பயணம் செய்த குதிரை! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!
ரயிலில் பயணிகள் பெட்டிகளில் விலங்குகள் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
ரயிலில் மனிதர்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் குதிரை உரிமையாளர் ஒருவர் குதிரையை ஏற்றிக்கொண்டு பயணித்ததால் அவரை ரயில்வே சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் ஆர்பிஎஃப் கைது செய்துள்ளது. பொதுவாக ரயில்களில் மனிதர்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் விலங்குகள் பயணம் செய்ய அனுமதி கிடையாது, இந்நிலையில் குதிரை உரிமையாளர் இந்த சட்டத்தை மீறியதால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி..!
இந்த சம்பவத்தன்று, 40 வயதான கஃபூர் அலி மெல்லாஹ் கொல்கத்தாவின் நேத்ரா ரயில் நிலையத்தில் இருந்து துர்காபுர் வரை சென்ற மின்சார ரயிலில் அவர் தனது குதிரையுடன் கிட்டதட்ட 23 கி.மீ பயணம் செய்துள்ளார். மனிதர்கள் மட்டுமே பயணம் செய்யும் நிலையில், குதிரை பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புகைப்படங்கள் வைரலாகியதையடுத்து ரயில்வே நிர்வாகம் அந்நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்நபர் கூறுகையில், குதிரையை பந்தயத்திற்கு அழைத்து சென்றதாகவும், பந்தயம் முடிந்து குதிரை களைப்பாக இருந்ததால் அதனை ரயிலில் அழைத்து செல்ல முடிவெடுத்து பயணித்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து ரயில்வே சொத்துக்களில் இடையூறு ஏற்படுத்தியதற்காகவும், ரயிலில் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புக்காகவும் அவர் மீது ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR