மகாராஷ்டிராவில் மோடிக்கு எதிராக Aghadi கூட்டணி எவ்வளவு காலம் நீடிக்கும்?
மகாராஷ்டிராவில் Maha Vikas Aghadi கூட்டணி வண்டி எவ்வளவு காலம் இயங்கும்? கர்நாடக நிலை ஏற்படுமா? அல்லது ஐந்து வருட ஆட்சியை நிறைவு செய்யுமா? போன்ற கேள்விகளை குறித்து ஆராய்வோம்.
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் (Maharashtra) கூட்டணி அரசாங்கத்தின் பதவியேற்பு நாளை நடைபெறுகிறது. உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) சிவாஜி பூங்காவில் நாளை முதல்வர் பதவியேற்பார். பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ளலாம். இதற்கிடையில், காங்கிரஸ்-என்.சி.பி. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. முதல்வர் பதவிக்கு வழங்கப்படும் எனக் கூறி, மற்ற கட்சிகளை இழுப்பது பேரம் இல்லையா? என்று ஷா கேட்டுள்ளார். 100 இருக்கைகள் கொண்ட கூட்டணி 56 இடங்களைக் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவியை வழங்கினால், அது நிச்சயமாக, அந்த கட்சி விற்பனையாகும் என்று ஷா கூறினார்.
முதல்வர் பதவிக்கு தங்கள் கட்சி வேட்பாளர் தான் இருப்பார் எனக்கூறி பாருங்கள், பின்னர் சிவசேனாவின் ஆதரவு உங்களுக்கு கிடைக்குமா? என்று பாப்போம் என சரத்பவார் மற்றும் சோனியா காந்திக்கு அமித் ஷா சவால் விட்டுள்ளார்.
இப்போது கேள்வி என்னவென்றால், மோடிக்கு எதிரான அனைத்தும் சாத்தியமாகுமா?
மாமா சரத் பவாருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அஜித் பவாருக்கு அமைய உள்ள மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அமைச்சராக முடியும். மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அஜித் பவார் இன்று (புதன்கிழமை) முதல் முறையாக ஊடகங்களுக்கு முன் வந்தார். அப்பொழுது, நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். இப்பவுள் இருக்கிறேன் என்று அஜித் பவார் கூறினார். கட்சியிலிருந்து என்னை நீக்கப்போகீறார்கள் என ஏதாவது அறிக்கை உங்களிடம் இருக்கிறதா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், நான் கட்சியில் இருந்தேன். தற்போதும் அங்கு தான் இருக்கிறேன். புதிய அரசாங்கத்தில் எனது பங்கு என்ன என்று கட்சி தான் முடிவு செய்யும் என்று அஜித் பவார் கூறினார்.
உத்தவ் தாக்கரே கூட்டணி குறித்து பேச எப்போது எல்லாம் வெளியே வந்தார்?
- நவம்பர் 11 அன்று ஹோட்டலில் ஷரத் பவாரை சந்தித்தார்
- நவம்பர் 12 அன்று ஹோட்டலில் அகமது படேலை சந்தித்தார்
- நவம்பர் 13 அன்று ஹோட்டலில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்
- நவம்பர் 21 அன்று சரத் பவாரின் வீட்டிற்குச் சென்றார்.
- நவம்பர் 25, மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ்-என்சிபி கூட்டத்தில் பங்கேற்றார்.
- நவம்பர் 26 அன்று, மும்பையின் ட்ரைடென்ட் ஹோட்டலில், கூட்டணிக் கட்சிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா அரசியல் விளையாட்டில் எப்படி மாற்றம் ஏற்பட்டது?
- நவம்பர் 23 அன்று மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்கப்பட்டது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் ஆனார்.
- நவம்பர் 24 அன்று பாஜக பெரும்பான்மையை நிருபிக்க ஒரு திட்டத்தை உருவாக்கியது.
- நவம்பர் 25 அன்று, 162 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி. கூட்டணி காட்டியது.
- நவம்பர் 26 அன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து ஃபட்னாவிஸ் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு.
- நவம்பர் 26 அன்று 80 மணி நேரத்திற்குப் பிறகு தேவேந்திர ஃபட்னாவி பதவியை ராஜினாமா செய்தார். (நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர்)
- நவம்பர் 26 அன்று மாலை மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.
- நவம்பர் 26 அன்று மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆளுநரைச் சந்தித்து அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறியது.
- நவம்பர் 27 அன்று மகாராஷ்டிரா சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) பதவியேற்றனர்.
மகாராஷ்டிராவில் யாருடைய அமைச்சர்கள்?
நமக்கு கிடைத்த தகவலின் படி, சிவசேனாவுக்கு ஒதுக்கீட்டில் 15 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் உட்பட மொத்தம் 14 அமைச்சர்களை என்சிபி பெற வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு 13 அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரசுக்கு துணை முதல்வர் தலைவர் அல்லது சட்டமன்ற சபாநாயகர் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
தற்போது வரை இறுதி செயபப்பட்ட உத்தவ் தாக்கரேவின் 28 அமைச்சர்கள்!!
சிவசேனா 10 அமைச்சர்களின் விவரம்:
ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், ராம்தாஸ் கதம், திவாகர் ராவடே, அனில் பராப், சுனில் சாவந்த், அப்துல் சத்தார், பிரதாப் சர்நாயக், சுனில் பிரபு, ரவீந்திர வைகர் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ்: 10 அமைச்சர்களின் விவரம்:
என்.சி.பி. கட்யிலிருந்து அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 10 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளன. ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், நவாப் மாலிக், ராஜேஷ் டோப், அனில் தேஷ்முக், ஜிதேந்திர அவாத், ஹசன் முஷ்ரிப் ஆகியோர் அமைச்சர்களாக ஆகலாம்.
காங்கிரஸ் கட்சியின் 8 அமைச்சர்களின் விவரம்:
அமைச்சர் பதவிக்கு 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. பாலாசாகேப் தோரத், அசோக் சவான், மணிக்ராவ் தக்ரே, யஷோமதி தாக்கூர், அமித் தேஷ்முக், விஜய் வட்டிதிவார், வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் அமைச்சர்களாக மாறுவது கிட்டத்தட்ட உறுதி.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.