இதுவரை எத்தனை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது -முழு விவரம்
பட்ஜெட் 2019: நாட்டில் 15வது முறையாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக 14 இடைக்கால பட்ஜெட்கள் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2019 மக்களவைத் தேர்தல்கள் வரவிருக்கின்றன, அதற்கு முன்னதாக மிகப்பெரிய விவாதமாக பட்ஜெட் உருவெடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கவனம் செலுத்தி உள்ளனர். அதேவேளையில் பொதுமக்களும் நமக்கு இடைக்கால பட்ஜெட்டில் என்ன பரிசு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜேட்லிக்கு பதிலாக பியுஷ் கோயல் தாக்கல் செய்வார் என மோடி அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை நமக்கு கிடைத்த செய்திகளின் ஆதாரப்படி, இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் நன்மைகள் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
நாளை 15 வது முறையாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முன்னதாக 14 இடைக்கால பட்ஜெட்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எதற்காக இடைக்கால பட்ஜெட்:
இடைக்கால பட்ஜெட் இரண்டு சூழ்நிலைகளில் தாக்கல் செய்யப்படுகிறது. முதலாவதாக, முழு வரவு செலவுத் திட்டத்தை(பட்ஜெட்) தாக்கல் செய்வதற்கு அரசாங்கத்திடம் நேரம் இல்லாத போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இரண்டாவது, எந்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதோ, அந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இரண்டு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதனால் அரசாங்கத்தின் செலவினத்தை கருத்தில்கொண்டு நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எப்பொழுது எல்லாம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது:
1. கடைசியாக இடைக்கால பட்ஜெட் மக்களவைத் தேர்தல் காரணமாக 2014 பிப்ரவரி 17 ஆம் நாள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.
2. 2008-09 ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நிதி மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இந்த வரவு செலவு திட்டத்தில் எந்த பெரிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதுவும் மக்களவைத் தேர்தல் காரணமாக தாக்கல் செய்யப்பட்டது.
3. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நிறைவு பெற்று, தேர்தல் வர இருந்ததால் 2004-05 ஆண்டு, அப்போதைய நிதி மந்திரி ஜஸ்வந்த் சிங் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.
4. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா 1998-99ல் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
5. மக்களவைத் தேர்தல் உடனடியாக வர இருந்ததால், 1991-92ல் டாக்டர் மன்மோகன் சிங் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
6. 1990ல் பொதுத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் திடிரென சந்திரசேகர் அரசாங்கம் விழுந்தது. அரசாங்கம் கவிழ்ந்ததால், அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா 1991 ஆண்டிற்க்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. யஷ்வந்த் சின்ஹா இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
7. 1980-81ல் ஆர்.வெங்கட்ராமன் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையை ஒரு அரசியல் உரைபோல வாசித்தார் என்ற குற்றசாற்றும் எழுந்தது.
8. 1977ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரலாற்றில் இடம் பிடித்தது. இதை நிதி மந்திரி ஹரிபாய் எம்.பட்டேல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் வரலாற்றின் மிகச்சிறிய உரைக்கொண்டதாகும்.
9. 1971-72ல், இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை YB சவூனால் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை.
10. மொரார்ஜி தேசாய் 1962-63 இல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்பொழுது ஜவாஹர்லால் நேரு பிரதம மந்திரியாக இருந்தார்.
11. மொரார்ஜி தேசாய் 1967-68ல் இரண்டாவது முறையாக இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். அப்பொழுது இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்தார். இவரின் இரண்டு இடைக்கால பட்ஜெட்களும் மிக முக்கியமானதாகவும் சிறப்பனதாகவும் பார்க்கப்படுகிறது.
12. நாட்டின் மூன்றாவது இடைக்கால பட்ஜெட்டை1957-58ல் பொதுத்தேர்தல்களுக்கு முன்பாக டி. டி. கிருஷ்ணமாச்சாரி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
13. இரண்டாவது இடைக்கால பட்ஜெட் சி.சி. தேஷ்முக் அவர்களால் 1952-53ல் மக்களவைத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
14. நாட்டின் முதல் இடைக்கால பட்ஜெட் நவம்பர் 26, 1947-ல் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களால் வழங்கப்பட்டது. இந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இந்த வரவு செலவுத் திட்ட காலம் ஆகஸ்ட் 15, 1947, மார்ச் 31, 1948 வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.