மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையை மேம்படுத்தும் வகையில் வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேசமயம் வெட்டப்படாத வைரங்கள் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, ​​பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதமாக உள்ளது. மக்களவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-காமர்ஸ் மூலம் நகைகளை ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் உதவுவதாகவும், அதற்காக இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 'எளிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை' செயல்படுத்துவதாகவும் அறிவித்தார்.


ALSO READ | Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்!


இதுகுறித்து நிதியமைச்சர் கூறுகையில், “ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தினங்களுக்கான சுங்க வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்படுகிறது. வெட்டப்படாத வைரங்களுக்கு பூஜ்ஜிய சுங்க வரி விதிக்கப்படும்” என்றார். இதனால், கற்கள் பதித்த நகைகள் விலை குறைந்து, அதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



ALSO READ |  ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவுத் திட்டம்!? அவசியம் என்ன?


இது தவிர பிற பொருட்களுக்கான சுங்க வரி, இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளை குறைப்பது குறித்தும் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் விளைவாக, மொபைல் சார்ஜர்கள், விவசாய பொருட்கள், வைர நகைகள், காலணிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் மின்னணு சாதனங்கள் போன்றவை விலை குறையும். 


ALSO READ | Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR