பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகவும் பொருளாதார வல்லரசாகவும் வளர்ந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு வல்லமை மிக்க நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு இந்திய மண்ணில் நிகழ்வதை உலகமே உன்னிப்பாக உற்று நோக்குகிறது. இந்திய பிரதமர் அமெரிக்கா சென்றபோது அவரை கவுரவிக்க ”ஹவ் டி மோடி?” என்ற மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்ட்து. அதில்  ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதற்கு  நிகராக என்பதை விட அதற்கு ஒருபடி மேலே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் ”நமஸ்தே டிரம்ப்” என்ற பிரம்மாண்ட வரவேற்பு டிரம்ப்பிற்கு இந்தியாவில் அளிக்கப்பட்டுள்ளது.


இருவருமே அதிரடியாக முடிவெடுப்பவர்கள். தன் நாட்டின் நலனுக்காக உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். அமெரிக்க மண்ணில் பிறப்பதாலேயே ஒரு குழந்தைக்கு உடனடியாக அதற்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்து விடும் என்று இருந்த சட்டத்தை அபத்தமானது என்று வர்ணித்த டிரம்ப் அதை நீக்குவதற்கான சட்டத்தை கடந்த ஆண்டு   இயற்றினார். இதன் மூலம் அமெரிக்காவிற்கு சுற்றுலா வருபவர்களுக்கு குழந்தை பிறந்தால் கூட அந்த குழந்தைக்கு குடியுரிமை கிடைத்து வந்த முந்தைய  நிலையில் மாற்றம் ஏற்பட்ட்து.


இதே போல பிரதமர் மோடி அவர்கள் இந்திய நாட்டில் சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டறியவும், உண்மையாக குடியுரிமை தேவைப்படும் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கவும் தேவையான சட்டத்தை பல எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.


அதிபர் டொனால்ட் ஜான் டிரம்ப் மற்றும் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி இருவருமே தாங்கள் கல்வி கற்ற  துறையிலேயே பரிணமித்த்து ஒரு ஆச்சரியம்.  டிரம்ப் பொருளாதாரத்தில் பட்ட படிப்பு முடித்தவர். மோடி அரசியல் அறிவியலில் முதுகலை முடித்தவர்.  முன்னதாக டிரம்ப் ஒரு வெற்றிகாரமான தொழிலதிபராக பணக்கார்ராக அறியப்பட்டார். பிறகே அரசியலுக்கு வந்தார். தான் பொருளாதார ஆதாயத்திற்காக பதவிக்கு வரவில்லை என்று அறிவிப்புடன் டிரம்ப் அரசியல் பிரவேசம் செய்தார்.  மோடி அவர்கள் விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நாட்டுக்கு சேவை செய்யும் முழு நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தார். மோடி அவர்களின் அரசியல் பயணம் நெடுங்கால அளவை  கொண்டது.  இருவரும் விமர்சன்ங்களை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்கு நன்மை தரும் முடிவுகளை எடுக்கும் தலைமை பண்பு கொண்டவர்கள்..


எனவே, இரு தலைவர்களின் நட்பும் உலகளவில் ஒரு பேசுபொருளாக இருந்தது.  இருவரும் சந்திக்கும் சமயங்களில் ஒரு அன்பான புரிதலுடன் இருவரும் இருப்பதை காண முடியும். அமெரிக்காவில் ஒரு முறை டிரம்பின் ஐ.கியூ பற்றி கேள்வி எழுந்து அந்த செய்தி பரபரப்பானது. அப்போது டிரம்ப் ஐ.கியூ சோதனையில் கலந்து கொண்டு அதை நிரூபித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அவரது ஐ.கியூ (IQ) 156 என்று அவர் கூறியிருந்தார்.  ஆனால் டிரம்ப் சற்று உணர்ச்சி வசப்பட்டு ஏறுமாறான அறிக்கைகளை விட்டு சிலசமயம் வாங்கிக் கட்டிக் கொள்வார். முதலில் கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் காரசாரமான அறிக்கைகள் விட்டார். பிறகு சிறிது நாட்கள் கழித்து நான் அவரை நேசிக்கிறேன் என்று சொல்லி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


பிரதமர் மோடி அவர்கள் அரசியல், மொழி, கலாசாரம், ஆன்மிகம் என எல்லா துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டவர். அவரது மேடைபேச்சோ, அல்லது வானொலியின் மன் கி பாத் உரையோ மக்கள் மனதை தொடும்  விதமாக இருக்கும். அவரது உரை  நடுவே மெல்லிய நகைச்சுவை இழையோடும். தவிர மோடி அவர்களிடம் ஐ.கியூ (IQ) மட்டுமல்ல இ.கியூ (E.Q) எனப்படும் Emotional Quotient திறன் அதிகம். எப்போதுமே தவறான அறிக்கைகளையோ, பாகுபாடான விஷயங்களையோ பிரதமர் மோடி பேசியதே இல்லை. ஒரு பக்குவமான ஆளுமை கொண்ட ஒரு தலைவராகவே மோடி  காணப்படுகிறார்.


டிரம்பின் வயது 73, மோடியின் வயது 69. இருவரும் தன்னலமற்று தங்கள் நாடுகளுக்கு பணியாற்றுவதில் ஒத்த கருத்தை கொண்டுள்ளார்கள் எனலாம். மேலும் தலைவர்கள் இருவரும் தலைமைப் பண்புடன், அதிகார வல்லமையை சரியாக கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பதால் உலகம் அவர்கள் மீது அபரிதமான மரியாதை கொண்டுள்ளது. இரு நாட்டின் நட்புறவை பார்த்து சில நாடுகள் பொறாமையும், சில நாடுகள் அச்சமும் கொள்கின்றன. அதிதி தேவோ பவ என்பதற்கு ஏற்ப டிரம்பிற்கு இந்தியாவில் விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டு  வருகிறது.