Bhopal Museum Gold Coins Theft: மத்திய பிரதேச தலைநகர் போபால் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தூம்-2 பட பாணியில் ஒருவர் திருட முயன்றுள்ளார். அத்தனை பிளானையும் பக்காவாக போட்ட அந்த திருடன் கடைசியில் சொதப்பியது எப்படி, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் திருடுவதை ஒரு பிழைப்பாக செய்து வந்தவர்தான் இந்த வினோத் யாதவ். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 1) அன்று போபாலில் உள்ள அந்த அருங்காட்சியகத்திற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். உள்ளே சென்ற அவர் வெளியே வராமல் அருங்காட்சியகம் அடைக்கும் வரை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு, அதன் பின் தங்கங்களையும், மற்ற கலை பொருள்களையும் திருட பிளான் போட்டுள்ளார். மேலும் செப். 2ஆம் தேதி திங்கட்கிழமையில் அருங்காட்சியகம் திறக்காது என்பதால் பொருள்களை திருடிச்செல் அத்தனையையும் சரியாக பக்காவாக திட்டமிட்டு செய்திருக்கிறார். 


திருடு போன தங்க காசுகள் 


தொடர்ந்து, அடுத்த நாள் காலையில் அருங்காட்சியகம் திறக்கவில்லை. சரியாக செப். 3ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டபோது, இரண்டு அறைகளின் பாதுகாப்பு கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பல கலைப்பொருள்கள் திருடுபோனது தெரியவந்துள்ளது. உடனடியாக அருங்காட்சியகத்தின் காவலாளிகள் அங்கு முழுவதும் தேடி உள்ளனர்.


மேலும் படிக்க | லஞ்சம்.. லஞ்சம்.. செபி தலைவர் மாதபி பூரி புச் மீது டாக்டர் சுபாஷ் சந்திரா கடுமையான குற்றச்சாட்டுகள்


காவலாளிகள் அருங்காட்சியகத்தில் தேடிக்கொண்டிருந்தபோது, அங்கு வினோத் யாதவ் சுயநினைவு இன்றி கிடப்பதை கண்டுள்ளனர். அவரின் அருகே பெரிய பையில் திருடுபோன பொருள்களையும் காவலாளிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த பையில் குப்தா அரச காலத்து தங்கக் காசுகள், ஆங்கிலேயர்கள் மற்றும் நவாப் காலத்து பொருள்கள், நகைகள், கலைப் பொருள்கள் ஆகியவை இருந்துள்ளன. இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசாரும் வினோத் யாதவிடம் விசாரணை மேற்கொண்டனர். 


ரூ. 50 கோடி மதிப்பிலான பொருள்கள் 


கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு தங்க காசுகளும் 50 கிராம் முதல் 100 கிராம் எடையில் இருந்துள்ளது. இதன் மதிப்பே ரூ. 8 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கலாம். மொத்தம் கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.15 கோடி என தெரிவிக்கப்படுகிறது. அந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் ரூ. 50 கோடி மதிப்பிலான கலைப்பொருள்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 


பாதுகாப்பு குறைபாடுகள்


தொடர்ந்து அனைத்து பொருள்களையும் திருடிச் சென்று தப்பிக்க முயற்சித்தபோது, 23 அடி உயரத்தில் இருந்து வினோத் யாதவ் கீழே விழுந்து அவரது காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து, டிசிபி ரியாஸ் இக்பால் கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சுவர் ஏறி குதிக்க முயற்சித்துள்ளார், ஆனால் சுவரின் மேல் இருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார்" என்றார். மேலும், அருங்காட்சியகம் முழுவதும் 50க்கும் மேற்பபட்ட விரல் ரேகைகளை கைப்பற்றியதாகவும், இந்த திருட்டுக்கு வெளியில் இருந்து உதவியவர்கள் யாரும் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


இந்த சம்பவம் அந்த அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. போதுமான எச்சரிக்கை ஒலி எழுப்பும் அமைப்பு இல்லை என்பதும், சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அருங்காட்சியகத்தின் கதவுகள் அனைத்தும் அலுமினியத்தால் செய்யப்பட்டு மிகவும் பலவீனமாக தோற்றமளிப்பதாகவும், அதன் கூரையும் உடைக்கக்கூடிய பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 


மேலும் படிக்க | செபி தலைவர் மாதபி பூரிக்கு மேலும் சிக்கல்.. அதிகாரிகள் நிதி அமைச்சகத்திடம் புகார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ