RRB NTPC CBAT Exam நகரங்கள் ஸ்லிப் வெளியிடப்பட்டது -எப்படி தெரிந்துக்கொள்வது
RRB NTPC CBAT Exam City Slip: தேர்வு தேதி மற்றும் நகர தகவல் சீட்டு ஆகிய விவரங்கள் RRB இன் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
RRB NTPC 2022: இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board Exam) NTPC CBAT ஊதிய நிலை 2 மற்றும் 5 பிரிவுகளுக்கான தேர்வு நகரங்களை குறித்து அதிகாரப்பூர்வ மற்றும் பிராந்திய இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் RRB NTPC CBAT தேர்வு சீட்டை நேரடியாக வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbcdg.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
RRB NTPC 2022 தேர்வு நகர சீட்டைப் பதிவிறக்க, விண்ணப்பதாரர்கள் RRB பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை போர்ட்டலில் நிரப்ப வேண்டும்.
RRB NTPC CBT 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான திறனாய்வுத் தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள். கணினி அடிப்படையிலான திறன் தேர்வு ஜூலை 30-ம் தேதி நடத்தப்படும்.
CBAT அல்லது CBTST தேர்வுக்கான RRB NTPC 2019 தேர்வு நகர சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் விவரங்களை தெரிந்துக்கொள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான வழிகளை பின்பற்றி தேர்வு நகரங்கள் குறித்து அறிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: JOB Openings: ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை ரெடி: அப்ளை பண்ன நீங்க ரெடியா
RRB NTPC CBAT தேர்வு நகர சீட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது:
படி 1: RRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் -rrbcdg.gov.in
படி 2: அங்கே City-Slip for CBTST என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
படி 4: உங்கள் RRB NTPC 2019 CBAT தேர்வு சிட்டி ஸ்லிப் திரையில் காட்டப்படும்
படி 5: அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
RRB NTPC தேர்வு சிட்டி ஸ்லிப்பில் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் மாநிலம், தேர்வு தேதி, தேர்வு நேரம், அறிக்கை நேரம், தேர்வு தொடங்கும் நேரம், தேர்வு மையம் கேட் மூடும் நேரம் மற்றும் ஷிப்ட் போன்ற விவரங்கள் இருக்கும்.
RRB NTPC CBAT இன் அட்மிட் கார்டு எப்பொழுது கிடைக்கும்:
RRB NTPC CBAT அட்மிட் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் கிடைக்கும். வழக்கமாக, தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன் அட்மிட் கார்டு வழங்கப்படும். எனவே, RRB NTPC CBAT இன் அட்மிட் கார்டு ஜூலை 26, 2022 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காக அட்மிட் கார்டு வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை RRB விரைவில் பகிர்ந்து கொள்ளும்.
மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா - உடனே இதை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ