HPCL Recruitment 2022: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. HPCL பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையைத் தொடங்கியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், HPCL இன் அதிகாரப்பூர்வ தளமான hpclcareers.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்னும் சில நாட்களில் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் வந்துவிடும் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்ப்பிக்கவும்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் காலியான பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 23, 2022 வரை ஆகும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் (HPCL Recruitment 2022), 294 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த காலியிடகளுக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HPCL வெளியிட்ட அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை
பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ 1,180 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் 1000 ரூபாய் விண்ணப்பக்கட்டணம், ஜிஎஸ்.டி 18% ஆகியவை அடங்கும். இதைத் தவிர பேமெண்ட் கேட்வே கட்டணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் விண்ணப்பிப்பவர்கள், கூடுதலாக செலுத்த வேண்டும்.
வேலைக்கான தேர்வு
HPCL ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், சிவில், மெட்டீரியல், கம்ப்யூட்டர், கெமிக்கல், டெலிவிஷன் மற்றும் வாட்டர் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டதாரி பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் இவை.
மேலும் படிக்க | 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை
ஆட்சேர்ப்பு நடைமுறையில், கணினி அடிப்படையிலான தேர்வு, குழு பணி, தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் ஆகியவை இடம் பெறும். நியமிக்கப்படவிருக்கும் பணிகளுக்கான சம்பளம் தொடர்பான விவரங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள். மூன்று விதமான சம்பள விகிதங்களில் ஊதியம் வழங்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களுக்கான பணிகள் எந்தெந்த துறைகளில் இருக்கின்றன என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மெக்கானிக்கல் இன்ஜினியர் 103
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 42
இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியர் 30
சிவில் இன்ஜினியர் 25
கெமிக்கல் இன்ஜினியர் 7
இன்பர்மேஷன் சிஸ்டம் ஆபிசர் 5
செக்யூரிட்டி ஆபீசர் உத்தரப் பிரதேசம் 6
செக்யூரிட்டி ஆபிசர் தமிழ்நாடு 1
செக்யூரிட்டி ஆபிசர் கேரளா 5
செக்யூரிட்டி ஆபிசர் கோவா 1
பாதுகாப்பு அதிகாரி 2
தரக் கட்டுப்பாட்டு அதிகாரி 27
ப்ளெண்டிங் அதிகாரி 5
எலக்ட்ரிகல் துறை மேலாளர் 3
மேலும் படிக்க: இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ