பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டையுடன் ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என முன்னதாக மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பின்னர் காலக்கெடு ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


எனவே அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகி உள்ளது. எனினும் எவ்வாறு இணைப்பது என்பதில் இன்னும் குழப்பங்கள் நிலவி வருகிறது. 


PAN எண்ணுடன் எவ்வாறு ஆதாரை இணைப்பது என்பது பற்றி கிழே காண்க:-


1. https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html என்ற இணைய முகவரியை பார்க்கவும்.


 


2. அந்த பக்கத்தில் தேவையான தகவல்களை உள்ளிடவும்


3. பின்னர் "Link Aadhaar" என்ற பொத்தானை கிளிக் செய்யவும்


உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டவுடன் உங்களுக்கு "ஆதார் இணைக்கப்பட்டது" என செய்தி காண்பிக்கப்படும், இல்லையனில் "இணைக்க இயலாது" என செய்தி காண்பிக்கப்படும்.